புதன், 28 செப்டம்பர், 2016

திருமூலர்




மிகவும் உத்தமமாக வாழ்ந்த சித்தரின் வரலாறு இது.சித்தர்களில் முதன்மையானவரும் சிவபெருமானிடமும்,நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவருமான திருமூலர் கயிலாசப் பரம்பரையை சேர்ந்தவர்.
இவரது வரலாறு குறித்து பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறியிருக்கும் தகவல்கள்.



திருக்கயிலாலயத்தில் நந்தி தேவரது திருவருள் பெற்ற மாணவர்களுள் ஒருவராய் அட்டமா சித்திகளைக் கைவரப் பெற்ற இச் சித்த மாமுனிவர் திருக்கயிலாயத்தில் இருந்து புறப்பட்டு தென்திசை நோக்கி செல்லும் வழியில் திருக்கேதாரம்,பசுபதி,நேபாளம்,அவிமுத்தம்(காசி),விந்த மலை,திருப்பரப்பதம்,திருக்காளத்தி,திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று பின்னர் காஞ்சி நகர் அடைந்து பின்னர் திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களுக்கு சென்று பின்னர் காஞ்சி நகர் அடைந்து பின்னர் திருவதிகை,தில்லை என்று காவிரியில் நீராடி அதன் பிறகு திருவாவடுதுறையை அடைந்து இறைவனை தரிசித்து விட்டு செல்கையில் அந்தனர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு மாடுகளை மேய்க்கும் குடியில் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் இறந்து நிலத்தில் விழுந்து கிடக்க பசுக்கள் அனைத்தும் அவனை சுற்றி வந்து கதறி அழுதன.

இக்காட்சியை கண்ட சித்த பெருமான் அப்பசுக்களின் துயர் நீக்க எண்ணித் தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்தி விட்டு கூடு விட்டு கூடு பாய்தல் (பிரகாயப் பிரவேசம்)என்னும் பவன வழியில் தமது உயிரை அந்த இடையது உடலில் செலுத்தி திருமூலராய் எழுந்தார்.



மூலன் எழுந்ததும் பசுக்களெல்லாம் துயர் நீக்கி அன்பினால் அவனது உடம்பை நக்கி,மோந்து மிகுந்த களைப்பினால் துள்ளி கொண்டு புல் மேயச் சென்றன.



அது கண்டு மகிழ்ந்த திருமூலர் (மூலன்) பசுக்கள் செல்லும் வழியே சென்று பின்னர் அவைகள் தங்கள் இல்லங்களுக்கு சென்றதும் தான் மட்டும் தனித்து நின்றார்.

அப்போது மூலனுடைய மனைவி பொழுது சாய்ந்த பின்னரும் தன் கணவர் இன்னும் சேராதது கண்டு அவனை தேடிக் கொண்டு வந்தவள் மூலன் வடிவில் சித்தரை வீட்டுக்கு அழைத்தாள்.

மூலரோ தான் அவளுடைய கணவன் அல்ல,அவனின் விதி முடிந்து இறந்துவிட்டான் என்றார்.தன் கண்ணெதிரே இருக்கும் கணவனே தான் இறந்து விட்டதாக கூறியதை கேட்டு மனம் பொறுக்காதவளாய் அவ்வூரில் உள்ளவர்களை அழைத்து தன் கணவருக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினை கூறி கதறினாள்.
அங்கிருந்தோர் மூலனுக்கு அறிவுரை கூறி அவளுடன் வீடு திரும்பு மாறு கூற மூலன் வடிவிலுள்ள சித்தர் தன் நிலையை பல முறை எடுத்துக் கூறியும்
நம்பாததால் மறுபடியும் அவ்வுடலை செயலற்றதாக்கி உண்மையை விளக்கினார்.கண்ணெதிர நடந்த இந்த அதிசயத்தை கண்டு ஊர் பெரியவர்கள் மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அவளது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
தன்னுடைய பழைய உடலை தேடி சென்ற சித்தர் அங்கு தன் உடலை காணததால் மூலனுடைய உடலிலே நிரந்தரமாக தங்கி திருவாடுதுறை கோயிலை அடைந்து யோகத்தில் வீற்றிருந்தது,உலக மக்களின் நன்மையை பொருத்து ஞானம்,யோகம்,சரியை,கியை என்னும் நால்வகை நன்னெறிகளும் கூறும் திருமந்திரம் என்னும் நூலை தொடங்கி ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களை பாடினார்.பின்னர் இந்நூல் நிறைவடைந்ததும் அதாவது 3000 ஆண்டுகளுக்கு பின் இறைவன் திருவடியை அடைந்தார்.சதுரகிரி தலப்புராணம் கூறும் திருமூலர் வரலாறு இது.



பாண்டியநாடு சித்து வித்தைகளுக்கு பெயர் போனது.அதனை ஆண்ட தவேத மன்னனின் பட்டத்தரியான சுந்தரவல்லிக்கு வீரசேனன் என்ற புதல்வனும்,இரண்டாவது மனைவியான சுந்தரவதனிக்கு தர்மாத்தன்,சூரசேனன்,வஜ்ராங்கதன் என்ற புதல்வர்களும் இருந்தனர்.
குருகுல வாசம் முடித்த பின் உரிய வயதில் நான்கு இளவரசர்களுக்கும் திருமணம் முடிந்தது.

வீரணன்-குணவதி,தர்மாத்தன்-தனமதி,சூரசேனன்-சுகமதி,வஜ்ராங்கன்-மந்திரவல்லி என்ற தம்பதிகள் நால்வரும் இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்ந்து வந்தனர்.

முதுமையடைந்த தவேதன் பட்டத்தரசியின் மகனான வீரசேனனுக்கு பட்டம் சூட்டி அரசனாக்கினான்.அரசனும் நல்ல விதமாக ஆட்சி புரிந்து குடிகளை நன்முறையில் காத்து வந்தான்.
இரவு நேரத்தில் வழக்கம் போல மாறு வேடம் பூண்டு நகர சோதனைக்கு கிளம்பிய மன்னன் வீரசேனன் திரும்பிய போது திடுக்கிட்டாள்.பார்வை மங்கிய நிலையில் உடல் முழுவதும் வியர்வை வெள்ளத்தில் நனைய துவண்டு போய் மஞ்சத்தில் படுத்து விட்ட மன்னனிடம் பதறிய நிலையில் காரணம் கேட்ட மனைவிக்கு பதில் சொல்ல முடியவில்லை.வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது.

அரண்மனை வைத்தியருக்கு செய்தி அனுப்பப்பட்டது.அவர் வருவதற்குள் மன்னனின் தலை துவண்டு சாய்ந்து விட்டது.அரண்மனை வைத்தியப் பட்டாளமே ஓடி வந்து மன்னரை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதை உறுதி செய்தது.



மன்னனின் மனைவி குரல் வெடிக்கக் கதறினாள்.அவளின் அழுகையொலி அந்த அரண்மனையை தாண்டி ஒலித்தது.அந்த நடுநிசியில் பாண்டிய நாடு சோகத்தில் புலம்பி தவித்தது.
அப்போது ஆகாய வீதியில் போய்க் கொண்டிருந்த திருமூலர் காதுகளில் இந்த புலம்பல் ஒலி அறைந்தார் போல் கேட்டது.அவர் கீழே நோக்கினார்.
அங்கே உயிரற்ற மன்னனின் உடலைக் கண்டு சோகம் தாளாமல் குணவதியும்,அரண்மனை சுற்றமும்,ஊர் மக்களும் ஓலமிட்டு அழுது கொண்டு இருந்தினர்.

நொடிப் பொழுதில் திருமூலருக்கு எல்லாம் புரிந்து விட்டது.அங்கு அழுதவரின் துயர் துடைக்க தீர்மானித்தார்.உடனே சதுரகிரிக்கு சென்று தான் தவம் புரியும் இடத்திற்கு சென்றார்.

தன் அந்தரங்க சீடன் குருராஜனை அழைத்து தான் சிறிது காலம் உன்னை பிரிந்திருக்க வேண்டியுள்ளது என்பதை தெரிவித்தார்.

"மகனே சிறிது காலம் பூவுலகில் மனிதனாக அதுவும் மன்னனாக வாழ விரும்புகிறேன்.பாண்டிய நாட்டின் ராஜேந்திரபுரியின் மன்னன் வீர சேனன் இறந்துவிட்டான்.அவரது அருமை மனைவியும் குடிமக்களும் அழுத காட்சி நெஞ்சை நெகிழச் செய்து விட்டது.அதனால் அந்த வீரசேனன் மகாராஜாவின் உடலில் பிரவேசித்து சில காலம் உலக வாழ்க்கையை ஈடுபடபோகிறேன்.நான் திரும்பி வரும் வரையிலும் கல்ப சாதனையால் வைரம் பாய்ந்து விளங்கும் இந்த உடலை காப்பாற்றி வைத்திருப்பாயாக"என்று கூறினார்.

முன்பு பசுக்களின் வருத்தத்தை தீர்ப்பதற்காக சுந்தரனார் உடலில் இருந்து இடையனாம் மூலனின் உடலில் புகுந்து தேவ உடலை இழந்து பூத உடலில் தங்கி விட்டார்.மறுபடியும் தெய்வீக உடலாக மாற்றிய மூலனின் உடலுக்கு சோதனை....ம்...
வீரசேனனின் உடலுக்காக இந்த மூலனின் உடலேயும் இழக்க துணிந்து விட்டீரோ?...என்று சீடனுக்கு மனதிற்குள் சந்தேகம் தோன்றினாலும் வெளியே கேட்கவில்லை.குருவின் கட்டளைக்கு மறு வார்த்தை பேசி அறியாத அந்த சீடனும் அவரின் செயலுக்கு சம்மதம் தெரிவித்தான்.

திருமூலர் குகையில் மறைவான ஓரிடத்தில் உடலை கிடத்தி விட்ட சூட்சும உடலோடு மன்னன் உடல் இருக்கும் இடத்திற்கு விரைந்தார்.அதற்குள் மன்னனின் உடலை கழுவி முடித்திருந்தார்கள்.கண்களில் கண்ணீர் வழிய குனவதி கதறிக் கொண்டிருந்தாள்.

அப்போது திருமூலர் மன்னின் உடம்பினுள் புகுந்தார்.அதுவரை அசையாமலிருந்த மன்னனின் உடல் அசைந்தது.சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டனர்.அழுகை ஒலி உடனே நின்றது.அதற்குள் திருமூலர் வீரசேன திருமூலராக எழுந்துவிட்டார்.
இறந்த மன்னன் உயிருடன் எழுந்ததை எண்ணி அனைவருக்கும் மகிழ்ச்சி.துயர கடலில் மூழ்கி கிடந்தவர்கள் இப்போது மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்.

தன் கணவர் இறக்கவில்லை என்று தெரிந்ததும் அரசனின் மார்பில் சாய்ந்தாள் மகாராணி.

"நான் தான் எழுந்து விட்டேனே...இன்னும் ஏன் துயரம்"என்று அவளை தட்டிக் கொடுத்து எழுந்தார்.
'அரசே என்ன நேர்ந்தது?....எதனால் மயக்கமுற்றீர்கள்?....தாங்கள் இறந்து போய்விட்டதாக அல்லவா அரண்மனை வைத்தியர்கள் கூறினார்கள்'....என்று மகாராணி கேட்டாள்.

"அரண்மனை வைத்தியர் சொன்னது உண்மை தான்.நான் செத்ததும் உண்மை.இப்போது பிழைத்திருப்பதும் உண்மை...எனக்கு மிகவும் களைப்பாக உள்ளது.பிறகு பேசுவோம்...."என்று கூறி விட்டு ராணியுடன் சென்றார்.

அரண்மனையில் ஏற்பட்ட பரபரப்பிற்கும்,குழப்பத்திற்கும் அளவே இல்லை.அரசரே அதற்கு விளக்கமளித்தார்.

நகர சோதனைக்கு சென்ற இடத்தில் நந்தவத்திலுள்ள பூச் செடியிலுள்ள கூர்மையான முள் ஒன்று அதில் ஊர்ந்து கொண்டிருந்த  கடும் விஷமுள்ள பாம்பு ஒன்றின் உடலில் குத்தியது.வலி தாங்காமல் சீற்றமுடன் திரும்பி பார்க்க எதிரில் இருந்த பூ தான் தனக்கு இடைஞ்சல் செய்கிறது என்று நினைத்து கொத்தி தன் விஷம் முழுவதையும் பூவில் இறக்கி விட்டு போய்விட்டது அந்த பாம்பு.

விஷத்தின் தன்மையை பற்றி அறியாத நான்.அப்பூவின் அழகில் மயங்கி,அதை பறித்து முகர்ந்தேன்.உடனே தலை சுற்றியது.கண்கள் இருண்டன.நான் இறந்து விட்டேன்.எப்படி பிழைத்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.
எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசி குணவதிக்கு மட்டும் சந்தேகம் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.

அரசர் தன் அருகில் இருக்கும் போது குணவதி இந்த உலகையே மறந்து விடுவாள்.அவர் அப்பால் சென்றதும் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக தவிப்பாள்.ஆனால் அவள் மனதில் மட்டும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

வீரசேன திருமூலர் ஒரு ராஜரிஷியை போல ஆட்சி நடத்தினார்.இரவு பொழுதில் ராணி குணவதிக்கு தத்துவ உபதேசங்கள் செய்தார்.நாட்கள் சில கடந்தன.குணவதியோ தன் கணவருக்கு உண்டான வேறுபாட்டிற்கு என்ன காரணம் என்பதை ஆராயத் தொடங்கினாள்.

"என்ன ஆயிற்று இவருக்கு?...ஒரு போதும் தன்னை விட்டு விலகாதவர்,இப்போது கண்டாலே விலகி செல்வதேன்?தத்துவ உபதேசம் வேறு செய்கிறாரே?...செத்து போய் பிழைத்ததில் இருந்து இப்படி அடியோடு மாறிவிட்டாரே....."

வழக்கம் போல் ஒருநாள் இரவு பொழுது வந்தது.அந்தப்புர அறைக்குள் வீரசேனர் நுழைந்ததும் ராணி தன் உள்ளத்திலுள்ளதை முன் வைத்தாள்.
"சுவாமி தாங்கள் யார்?...நாட்டையும் நாட்டு மக்களையும் அடியோடு மாற்றி விட்ட தாங்கள் யார்?தாங்கள் பழைய மகாராஜாவே இல்லை.இதை தங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்தேன்".

"உத்தம கற்புக்கரசியே! நான் உனக்கு உண்மையை சொல்கிறேன் 

கேள்!"என்று நடந்தவை அணைத்தையும் கூறினார்.

"இன்று நீ வீரசேனனின் மனைவி.இந்த உடல் வீரசேனனின் உடல்.இது உனக்கு மட்டுமே சொந்தமானது.உன்னுடைய உடலை எனக்கு சொந்தம் என்று ஒருநாளும் நினைத்ததில்லை.அது வீர சேனனுடையது.நான் வெறும் ஆத்மா.உறவும் அதனால் உண்டான பிணைப்பும் உடலுக்கு மட்டுமே தவிர,உயிருக்கு கிடையாது.உன் கணவன் வீரசேனன் இறந்துவிட்டான்.அன்று நீயும் ஊர் மக்களும் அழுது புலம்புவதை கண்ட நான் மனமிறங்கியே வீரசேனனின் உடலில் புகுந்து கொண்டேன்.அதனால் தான்.வீரசேனனின் உடலோடு உன்னோடு பழகினேன்.தவறென்றால் என்னை மண்ணித்து விடு."

"என் கணவனின் உடலில் புகுந்திருப்பது சித்த புருஷரா?...சுவாமி....தாங்கள்.என்றென்றும் இந்த உடம்பில் இருப்பீர்கள் அல்லவா?..."என்று குணவதி கேட்டாள்.
"அம்மா...உன் கணவரின் இந்த உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது.அழிந்து போய் விடும்.அதனால் நான் இந்த உடம்பில் நிரந்தரமாக இருக்க முடியாது.சதுரகிரியில் உள்ள ஒரு குகையில் எனது காயகல்ப உடல் இருக்கிறது.இன்னும் கொஞ்ச நாளில் நான் இங்கிருந்து போய் விடுவேன்"என்று அவளுக்கு பதில் சொன்னார் வீரசேனன் உடம்பிலுள்ள திருமூலர்.

இதை கேட்டு திடுக்கிட்ட குணவதி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,சுவாமி தங்கள் உடம்பு மலையில் காவல் இல்லாமல் இருக்கிறதே....அதற்கு ஏதாவது ஆபத்து வந்து விட்டால் என்ன செய்வது?இதை தங்கள் மீது உள்ள அக்கரையினாள் கேட்கிறேன்"என்றாள் கண்ணீருடன்.

அவள் உண்மையில் அனுதாபத்துடன் தான் கேட்கிறாள் என்று நினைத்த திருமுலன் இரக்கத்தின் காரணமாக உண்மையை சொல்ல ஆரம்பித்தான்.
"கவலை படாதே!குணவதி அதை என் சீடன் குருராஜன் நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.எந்த விலங்கும் அதை நெருங்க முடியாது.காரணம் அது நெருப்பு மயமானது...அந்த கற்ப தேகத்தை சாதாரண தீயினால் எரித்துவிட முடியாது.குங்கிலியம்,வெடியுப்பு,வெங்காரம் இவற்றை இடித்து தூளாக்கி அந்த உடலில் பூசி பின் அவ்வுடலை விராலி இலையால் மூடி,விறகு வைத்து எரித்தால் தான் அது சாம்பலாகும்"என்று கூறி அவள் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ராணியின் சிந்தனை இப்போது வேறு விதத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது.நம் கணவர் இறந்து விட்டார்.இப்போது இருப்பதோ சித்த புருஷர்.இந்த உண்மை நம்மை தவிர வேறு யாருக்கும் தெரியாது.இவர் நம்மைவிட்டு பிரிந்து போய் விட்டால் ராணி என்கின்ற அந்தஸ்த்து போய்விடும்.நாம் விதவை கோலம் பெற நேரிடும்.மன்னரின் சிற்றன்னை மகனான தர்மார்த்தன் அரசனாவான்.தன் சுக போக வாழக்கையெல்லாம் நாசமாக போய்விடும்.அதன் பிறகு என் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடும்.என்ன செய்வது இப்போது?....

ஏன்?....எதற்க்கு?....என்று கேட்காமல் தான் சொல்வதை அப்படியே கேட்கும் அரண்மனை ஊழியர்களை அழைத்தாள்.சதுரகிரி மலை குகையில் வைத்திருக்கும் சித்தரின் உடலை தேடி கண்டுபிடித்து அழித்துவிடும் படி இரகசியமாக கட்டளை இட்டாள்.அரண்மனை விசுவாசிகள் இராணி சொன்ன செயலை அச்சு பிசங்காமல் செய்து முடித்து விட்டார்கள்.
குகையில் குருநாதரின் உடலுக்கு காவலனாய் இருந்த சீடன் குருராஜன் வருடக்கணக்கில் காத்திருந்து குருவிற்கு என்ன ஆயிற்றோ....என்று அவரை தேடி கொண்டு சென்ற வேளையில் இவ்வளவு வேலையும் செய்து முடிக்கப்பட்டு விட்டது.சித்தரின் காய கல்ப தேகம் அழிந்தது.இனிமேல் அவர் நம்முடனே இருப்பார் என்கின்ற சந்தோஷக் கடலில் மிகுந்த ராணி எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் எப்போதும் போல் திருமூலரிடம் இயல்பாகவே இருக்க ஆரம்பித்தாள்.
இராணியின் நடவடிக்கைகள் சித்தருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே ஒரு நாள் வேட்டைக்குப் போவது போல் கிளம்பி சதுரகிரி மலைக்கு சென்று தன் உடல் வைத்துள்ள இடத்திற்கு சென்றார்.வழியில் குருராஜன் எதிர்படவே அவனையும் அழைத்துக் கொண்டு குகைக்குள் சென்றார்.
காயகல்ப உடம்பை காணவில்லை சித்த புருஷர் நடந்தவற்றை  உணர்ந்தார்.

குணவதி துரோகம் செய்திருந்தாலும் வீரசேனன் உடலில் இருக்கும் தான் அவளுக்கு துரோகம் செய்ய கூடாது என்று தீர்மானித்தார்.

அன்றிலிருந்து தத்துவ உபதேசங்கள் செய்வது நிறுத்தினார்.குணவதி எத்தனையோ முயற்ச்சி செய்தும்ஷபயனில்லை.உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன்னர் சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்வார் என்றும்,அதனால் மகாராணியே நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்றும் பிரகடனம் செய்தார்.

அரசரின் இந்த பிரகடனம் அரசியை திடுக்கிட வைத்தது.திருமூலரிடம் சென்று "ஏன் இந்த திடீர் முடிவு?...."என்று வினவினாள்.

சித்தர் சிரித்து கொண்டரே தவிர பதில் சொல்லவில்லை.

இனியும் எதையும் மறைப்பதில் பயனில்லை என்று எண்ணிய மகாராணி தன் சுயநலச் செயலைக் கூறி தன்னை மன்னிக்கும் படி கண்ணீர் விட்டு அழுதார்.

குணவதியின் கண்ணீரை கண்டு மனம் இரங்கினார் திருமூலர்.அவள் நிலையில் இருந்து பார்த்தால் அவள் செய்தது சரியென்றே பட்டது.எந்த மனைவி தன் கணவனை பிரிந்து வாழ ஆசைப்படுவாள்?....இருந்தாலும் நம்பிக்கை துரோகம் கூடாதல்லவா?...இன்னும் சிறிது காலம் இருக்க கூடிய அவளை நாம் ஏன் நோகடிக்க வேண்டும் என்று எண்ணியவராய்,"சரி அழாதே...என்ன வரம் வேண்டும் கேள்"என்றார்.
ராணியும் தயங்காமல் சித்தர் என்றென்றும் வீரசேனன் உடலில் தன்னுடனே தங்கி விட வேண்டும் என்ற ஆசையில் தான் என்றைக்கும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று கேட்டாள்.சித்தரும் அவள் கோரிய வரத்தை அளித்தார்.

சித்தர் வாக்குப் பொய்க்காது அல்லவா?...இனி வீரசேன மகாராஜா தன்னை விட்டு போக மாட்டார் என்று மகிழ்ந்தாள் ராணி.ஒரு நாள் இரவு....ஊரே உறங்கி கிடந்தது.வீரசேன திருமூலர் யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியேறி சதுரகிரி நோக்கி போனார்.பொழுது பு புலரும் வேளை.நதியில் நீராடிக் கரை ஏறியவர் அங்கே அந்தனர் ஒருவர் அசையாமல் கற்சிலையை போல் உட்காந்திருப்பதை பார்த்து வியப்படைந்து அவனருகே சென்று பார்த்து வியப்படைந்து அவனருகே சென்று பார்த்த போது அவன் கண்கள் நிலைத்து போய் இருப்பதை கண்டார்.மூச்சு இயங்கவில்லை.தொட்டவுடனே அவன் உடல் அப்படியே கீழே விழுந்தது.ஆம்.அவன் எப்போதோ இறந்து விட்டிருந்தான்.

ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக் கோவிலில் இருந்த ஜம்புகேஸ்வரர் என்னும் அந்த அந்தணன் பிராணயாமப் பயிற்ச்சியை மேற்கொள்வதற்காக சதுரகிரியை அடைந்து குருவின் துணையின்றி முரட்டுத்தனமாகப் பயிற்சியை மேற்கொண்டான்.தன்னை அடக்க முயன்றவனை அடக்கி விட்டு மூச்சு பறந்து விட்டது.



வீரசேனன் தன் அரச உடம்பை விட்டு விட்டு அந்தண உடம்பில் நுழையத் தீர்மானித்தார்.

கூடவே குணவதிக்குத் தாம் அளித்த வாக்குறுதியும் நினைவுக்கு வந்தது.வீரசேனன் உடலை சிரஞ்சீவத் தன்மை உடையதாக்க நினைத்தார்.அப்போது தானே அவள் நித்திய சுமங்கலியாக இருக்க முடியும்.
அரச உடலை எங்கே விட வேண்டும் என்று தீர்மானித்த போது அங்கிருந்த "யானை உண்டி"எனும் பெருத்த மரமொன்று தென்பட்டது.அந்த மரத்தில் பெரிய பொந்து ஒன்று தென்பட்டது.
வீரசேனத் திருமூலர் மர பொந்துக்குள் நுழைந்து உட்கார்ந்தவர் மன்னரின் உடலை அங்கேயே விட்டு விட்டு ஜம்புகேஸ்வரம் உடம்பில் நுழைந்தார்.(இது அவரின் மூன்றாவது உடம்பில் கூடு விட்டு கூடு பாயும் செயல்).

ஜம்புகேஸ்வர திருமூலர் எழுந்தார்.எழுந்ததும் ஜோதி மரத்தின் பூக்களை பறித்து,அதனுடன் சில மூலிகைகளை சேர்த்து நன்றாக குழைய அரைத்து அந்தக் கரைசலில் மந்திர சக்தியை ஏற்றி கரைசலை மரப் பொந்திலுள்ள அரசனின் உடலில் பூசினார்.மரத்தின் மேற்புறத்தை மரப்பட்டைகள்,இலைகள்,கிளைகள் முதலியவற்றை கொண்டு மூடினார்.பின்னர் சில மந்திரங்களை உச்சரித்தவுடன் மர பொந்து மூடிக் கொண்டது.

இனிமேல் யாரும் இந்த அரசனின் உடம்பைப் பார்க்க முடியாது.அரச உடம்பு  இருக்கும் மரம் அரச மரம் என்றே அழைக்கப்படும் என்று சொல்லி விட்டு சதுரகிரியில் ஒரு குகைக்குள் இருந்து சானைகள் பல செய்து மறுபடியும் தேகத்தைக் காய கல்ப தேகமாக ஆக்கிக் கொண்டார்.

சதுரகிரியில் குருராஜனுடன்(சீடன்) சேர்ந்து இன்னும் பல சீடர்கள் அவரிடம் சேர்ந்தனர்.சதுரகிரி ஒரு தவச்சாலையாக திகழ்ந்தது.ஜம்புகேஸத் திருமூலர் அவர் நல்வழி காட்டினார்.இன்னும் அவர் சதுரகிரியில் இருப்பதாக பெரியோர்கள் சொல்லக் கேள்வி.

வீரசேன திருமூலரை பிரிந்து வருத்த முற்றிருந்த குணவதி ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு தர்மார்த்தன் -தனமதி,ஆரசேனன்-சுகமதி முதலியோருடன் சதுரகிரி மலையில் இருக்கும் ஜம்புகேஸ்வர திருமூலரை தரிசிக்க சென்றாள்.

ஜம்புகேஸ்வர திருமூலர் தாம் யாரென்று அவளுக்கு தெரியாத நிலையில் அவளது குறைகளை கேட்டறிய அவள் தன்னை விட்டு பிரிந்த சித்தயோகியான தன் கணவரை பற்றி விபரம் தமக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்,மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வழி செய்யுமாறு வேண்டினாள்.



மீண்டுமொரு பந்தத்தை தொடர விரும்பவில்லை ஜம்புகேஸ்வர திருமூலர்.அவள் கணவர் தம் சக்தியால் அரசமரமாக உருமாறியுள்ளான் என்றும் அவள் அரசமரத்தை பூஜை செய்வதினால் அவள் பதி சேவையை அடைந்ததன் பலனை அடைய முடியும் என்று அருளாசி வழங்கினார்.
தான் செய்த சிறு தவறு தன் வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டதை எண்ணி வருந்திய குணவதி அந்த அரச மரத்தினை வணங்கி,பல முனிவர்களையும் தரிசித்து விட்டு பின் நாடு திரும்பினாள்.
மேருமலை வடபாகத்தில் மடையை அடுத்திருந்த வனத்தில் தாருமூலர் யாகம் செய்தார்.உலக ஆசைகளை துறந்து வினைபயன்களையும் விட்டு,தமக்கு தொண்டு புரிந்த சித்தர்களுக்கும்,மார்கண்டேயனுக்கும்,கண்ணபிரானுக்கும் உபதேசம் செய்தார்.

...யடவிடக்கும் சென்று தானும்
பண்டுளவு கிருஷ்ண பூபாலனுக்கு
பார்தனில் உபதேசம் செய்தார்...

கிருஷ்ணன் இருந்த துவாபரயுகத்தில்,மகாபாரத காலத்தில் திருமூலரும் இருந்தார் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
திருமூலர் கைலாயத்திலிருந்து புறப்பட்டு வரும் வழியில் மகாநதி( பூரி ஜெகன்னாதம்)அருகில் துவாரபுரி அரசன் கண்ணன் ஒரு வேடனால் கொல்லப்பட்டு,அவ்வேடன் கண்ணனின் உடலை சிதையில் வைத்து கொளுத்தி விட்டு போய் விட,உடனே பெருமழை பெய்ய கருகிய கால்களை உடைய கண்ணனின் உடம்பானது வெள்ளத்தால் அடித்து கொண்டு போகபட்டு பூரிக்கு பக்கத்தில் கரை ஒதுங்கியது.அவ்வூரார் கண்ணனை இனம் கண்டு அடக்கம் செய்து கோவில் அமைத்தார்கள் என்றும் அதுவே பூரி ஜெகன்னாதர் கோவில் என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை திருமூலரே கண்டதாகவும் சொல்லப்படுகிறது.புராணங்களிலும் இதிகாசங்களிலும் இல்லாத இச் செய்தியை அகத்தியர் மட்டுமே தருகிறார்.திருமூலர் எண்ணாயிரம் திருமந்திரம் இயற்றியதாக அகத்தியர் தமது கௌடிய சாரகம் என்னும் நூலில் கூறியுள்ளார்.அகத்தியர் 12000 முதல் காண்டத்தில் திருமூலர் இயற்றிய நூல்கள் காணப்படுகின்றன.

திங்கள், 26 செப்டம்பர், 2016

போகர்

நவ நாதர்களில் ஒருவரான காலங்கியின் சீடரான இவர் சித்தர்களிலே முதன்மையானவர்.புலிப்பாணியின் குரு.இவரது பெற்றோர்கள் சீனாவில் பெண்களுக்கு துணி வெளுத்து பிழைப்பை நடத்துபவர்கள் என்று அகத்தியர்12000 என்ற நூலில் காணப்படுகிறது.



"சித்தான சித்து முனி போகநாதன்
சிறந்த பதிணெண் பேரில் உயர்ந்த சீலன்
கத்த னென்னும் காலங்கி நாதர் சீடன்
கனமான சீன பதிக் குகந்த பாலன்
முத்தான அதிசயங்கள் யாவற்றறுந்தான்
மூதுலகில் கண்டறிந்த முதல்வன் சித்தன்
நித்தமுமே மாசில்லா கடவுள் தன்னை
நீலணிலத்தில் மறவாத போகர் தானே"



சீன நாட்டிலுள்ள வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் போகர் மரபை சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர் திருமூலர் காலத்தை சார்ந்தவர் என்றும் தமிழ் நாட்டிலிருந்து சீனாவிற்கு சென்று அங்கு பல காலம் வாழ்ந்து இருந்து சீன மொழியில் பல நூல்களை இயற்றி மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்து பழனி மலையில் வசித்நு வந்து பழனி தண்டாயுதபாணி சிலையை நவபாஷாணக் கட்டில் தயாரித்தார் என்றும் இவரது வரலாற்றில் கூறப்படுகிறது.

தமிழில் இவர் இயற்றிய நூல்களை விட சீனாவில் இவர் இயற்க்றிய நூல்களே அதிகம்.சீனாவில் அவருக்கு போ-யாங் என்ற பெயர் என்றும்.வா-ஓ-சியூ என்ற பெயரில் சிறந்த ஞானி என்றும் போகரை பற்றி போகர் சத்த காண்டம் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
இவர் சீனா செல்வதற்கு முன் கொங்கணவர்,கருவூரார்,இடைக்காடர்,சட்டை முனி போன்ற சீடர்கள் அவருடன் இருந்ததாகவும் அங்கிருந்து சீடராக திரும்பி வந்தவர் புலிப்பாணி மட்டுமே என்றும் கூறுவர்.

இது தவிர போகர் சீனாவில் போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து சீன நாட்டவராகவே பல காலம் வாழ்ந்ததார் என்றும் புலிப்பாணி சித்தர் மீண்டும் அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்ததாகவும் கூறுவர்.
போகர் தம் சீடர் அறுபத்து மூவருக்கும் அஷ்டாங்க யோக கலையை கற்றுக் கொடுத்ததாகவும் தம்மிடம் கற்றுக் கொண்டனவற்றை வெளியில் சென்று பரிசித்து பாருங்கள் என்று சொல்லி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப அவர்களும் நாடு முழுவதும் சுற்றி பார்த்து விட்டு பின்பு விண்ணுலகிற்கு சென்று அங்குள்ள ஆறு,குளங்களையெல்லாம் பார்த்து விட்டு மணணுலகிற்கு வந்து மேரு மலையை சுற்றி வணங்கி விட்டு கீழே இறங்கி போகரை கண்டு வணங்கி நின்றனர்.

தம் சீடர்களை கண்ட போகர் மகிழ்ந்து சிறிது காலம் சமாதி நிலையில் இருங்கள் என்று கூறி தாமும் சுகணங்க மரத்தின் கீழ் சிவயோக நிலையில் இருந்தார்.

தம் தவ வலிமையால் எண்ணிலடங்கா சித்திகளை பெற்று அவ்வறிய சக்தியை மக்கள் நல வாழ்விற்காக பயன் படுத்தினார்.

தம் சித்த சக்தியை பெருக்கி கொள்ள இமயமலை,மேருமலை போன்ற இடங்களுக்கு சென்று அங்கு தவம் புரியும் சித்தர்களிடமிருந்து காயகல்ப இரகசியங்களை கற்றுக் கொண்டார்.
மக்கள் கருத்து குருடராய் இருப்பதை கண்டு எப்படியாவது இவர்களுக்கு உதவி செய்து  அவர்களை திருத்தவேண்டும் என்று நினைத்தார்.

தவம் செய்பவர்களுக்கு அவர்களின் உதவிக்காக தங்கம் செய்யும் முறையை சொல்லி கொடுத்தார்.வியாதியஸ்தர்களுக்கு நோய் தீர்த்து மீண்டும் நோய் தாக்காமல் இருக்கும் வழிகளை கற்றுக் கொடுத்தார்.போகத்தில் திளைப்பவர்களுக்கு அதன் நன்மை தீமையை எடுத்துரைத்தார்.

தம் சீடர்களுக்கு காயகல்ப ரகசியங்களையும் குளிகை செய்யும் முறைகளையும் சொல்லிக் கொடுத்தார்.
குளிகையின் உதவியால் ஆகாய மார்க்கமாக கிளம்பி இமயமலை,மேருமலை  முதலிய இடத்திற்கு சென்று அங்குள்ள சித்த புருஷர்களை கண்டு தரிசித்தார்.
அவர்கள் போகருக்கு அதுவரை தெரியாதிருந்த காயகல்ப இரகசியங்கள் பலவற்றையும் குளிகை விபரங்களையும் சொல்லி கொடுத்தார்கள்."உலக மக்களுக்கு என்ன தான் நல்வழி காட்டினாலும் அவர்கள் உன் வழி வரமாட்டார்கள்.அவர்கள் தலைவிதி அவ்வளவு தான்.அவர்கள் உன்னை எவ்வளவு அவமான படுத்தினாலும் நீ கவலைபடாதே.உன் முயற்ச்சியில் தவறாதே"என்று கூறி வழியனுப்பினார்.

பின்னர் போகர் தமிழ்நாட்டை அடைந்து தானறிந்தவற்றை அடுத்தவர்களுக்கு பயன்படுத்தும் முறையில் இறங்கினார்.ஆனாலும் யாரும் போகரை லச்சியம் செய்ய வில்லை.

இருந்தாலும் போகர் தம் முயற்ச்சியில் இருந்து மனம் தளராமல் மந்திர ஜால வித்தைகளை காட்டுவது.இறந்தவர்களுடன் பேசுவது போன்ற அதிசயங்களை செய்து காண்பித்தார். வெகுத் தொலைவில் நடப்பவைகளை தெரிந்து கொள்ள ஆகாசப் பயணம்,தண்ணீரின் மேல் பயணம் போன்றவற்றிற்கான இயந்திர நூல்களை இயற்றினார்.அதில் பஞ்ச பிராணன்களை பற்றி எழுதி எந்த நேரத்தில் காரியம் செய்தால் வெற்றி கிட்டும் என்பதையும் விளக்கினார்.

ஒருநாள் இளம் வயதில் மரணமடைந்த இளைஞனின் மனைவி அழுது கொண்டிருந்தாள்.அவளின் விதவைக் கோலம் போகரை மிகவும் பாதித்தது.
இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவி மந்திரம் சித்தியை பெற மேரு மலையில் அருகில் இருக்கும் நவநாத சித்தர்களின் சமாதியை அடைந்தார்.
ஒன்பது சித்தர்களும் அவருக்கு தரிசனம் தந்தனர்.போகரும் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவி மந்திர வித்தயை கற்று தரும்படி அவர்களிடம் கேட்டார்.

"இந்த மக்கள் இப்படித்தான் இருப்பார்கள்.என்ன தான் துன்பம் வந்தாலும் திருந்தி வாழ மாட்டார்கள்.அலை அலேயாக இறந்து போவார்கள்.அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பெடுப்பார்கள்.அவர்களுக்காக நீ வருந்தாதே .தவத்தை செய்....போ" என்று போகருக்கு அறிவுரை கூறினார்கள்.
ஆனாலும் போகர் திரும்பவும் அம் மந்திரத்தை சொல்லி தரும்படி வற்புறுத்தினார்.

இதனால் பொறுமை இழந்த அந்த சித்தர்கள்,"போகா! தெய்வ நியதிக்கு எதிராக நீ செயல்படுகிறாய்.ந் கற்றுக் கொண்ட வித்தைகளால் தெய்வ நிந்தனை தான் அதிகமாகும்.எனவே நீ கற்றுக் கொண்ட எல்லாமே உனக்கு மறந்து போய்விடும்....போ"என்று சாபமளித்தனர்.

போகர் திடுக்கிட்டார்"உலக மக்களின் நன்மைகளின் பொருட்டு நான் பாடுபட்டதற்கு இது தான் பலனா?....அப்படியானால் நான் இங்கேயே இறந்துவிடுகிறேன்"என்று கூறி அழுதார்.

சித்தர்கள் அவரை தடுத்து "ஏராளமாக உள்ள.காயகல்ப முறைகளை அறிந்த நீ இறந்து போனால்,அது உலக மக்களுக்கு மட்டுமல்ல சித்தர்களின் உலகிற்கு கூட பேரிழப்பாகும்.எனவே தகுதி உள்ளவர்களுக்கு காயகல்ப முறைகளை சொல்லி கொடு.அவர்களை நீண்ட காலம் வாழ வை.மரணமடைந்தவர்களுக்காக வருந்தி கொள்ளாதே!"என்று அறிவுரை கூறினார்கள்.அதுவரையில் போகர் அறிந்திராத காயகல்ப முறைகளையும் கற்று கொடுத்து மறைந்தனர்.

போகர் சில காலம் அங்கேயே இருந்து பாதரசத்தை கட்டும் வழிமுறைகளை தெரிந்து கொண்டு அங்கிருந்து காளம்பி சீனா சென்றார்.அங்கே தம்மிடம் வந்து கேட்ட சித்தர்களுக்கு குளிகையை அளித்தார்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை இன்னமும் ஏராளம் இருக்கின்றன என்று எண்ணிய போகர் மறுபடியும் மேருமலைக்கு போனார்.அங்கே காலங்கிநாதரின் சமாதியை கண்டார்.
அவர் மனம் ஒன்பது சித்தர்களின் ஒருவரான காலங்கிநாதரின் ஒரே மாணவன் நான் தான் என்று கர்வத்துடன் நினைத்தது.அங்கே அகங்காரம் தலை தூக்கியது.அவர் காலங்கிநாதரின் சமாதியை வணங்கி,"குருநாதா,பிறவியின் மர்மத்தை அறிந்து எல்லோரும் இன்பமாக இருக்க வேண்டும் என்பது தங்கள் மாணவனான என் ஆசை அது நிறைவேறினாள் தங்களுக்கு தானே பெருமை"என்று முறையிட்டார்.

அப்போது பலத்த சிரிப்பொலி நாலா பக்கங்களிலும் கேட்டது.போகர் அதிர்ச்சியோடு பார்த்தார்.ஆளரவமே இல்லாது கிடந்த அந்த இடத்தில் திடீரென்று பல சித்தர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.தம் கண்களில் தெரிந்த அத்தனை பேரையும் வலம் வந்து வணங்க வேண்டும் என்று போகர் எண்ணினார்.

அது நடக்க கூடிய காரியம் இல்லை என்பதை உணர்ந்த போகர் அவ்விடத்தையே சுற்றி வலம் வந்து அவர்களை வணங்கினார்.

"உலகை வாழ்விக்கும் சித்த புருஷர்களே,தாங்கள் எங்கே இருந்தீர்கள்?....."

"போகா!நாங்கள் எப்போதும் இங்கேயே தான் இருக்கிறோம்.குருநாதர் காலங்கிநாதரின் சீடர்கள் நாங்கள்.நாங்கள் குருநாதர் சமாதியை விட்டு ஒரு போதும் நகரவே மாட்டோபம்,அத்தனை சித்தர்களும் ஒருமித்த குரலில் போகருக்கு பதிலளித்தார்கள்.

"இதுவரை நான் ஒருவன் மட்டுமே காலங்கிநாதரின் சீடன் என்று நினைத்திருந்தேன்.இப்போது நீங்கள் என் குருநாதரின் சீடர்கள் என்று தெரிந்ததும் என் கர்வம் அடியோடு போய்விட்டது.அணைவரும் என்னை மண்ணியுங்கள்.இங்கே எத்தனை காலமாக இருக்கிறீர்கள்?"என்று போகர் அவர்களிடம் மிகுந்த பணிவுடன் கேட்டார்.

அரிச்சந்திரன்,இராவணன்,ராமர்,பாஞ்சாலன்,புரூரவஸ்,திருதராஷ்டிரன்,விராடன்,பாண்டவர்கள் அணைவரும் அவர்கள் குருநாதர் சொல்லி கொடுத்ததை இங்கே பரிட்சார்த்தமாக சோதனை செய்ய வந்த காலத்திலிருந்தே தாங்கள் இங்கே இருப்பதை சொன்ன சித்தர்கள் போகரை தம் அருகில் வரும்படி அழைத்தார்கள்.

"போகா! அங்கு பார்;இங்கு பார்;இதோ இந்த பக்கம் பார்;இங்கே திரும்பு;இப்படி பார்;என்று பல இடங்களை அவர்கள் சுட்டி காட்ட,அந்த இடங்களை போகர் பார்த்த போது செந்தூரம்,பஸ்பம்,தங்கம்,ரவரத்தினங்கள்,முதலியவை ஏராளமாக குவிந்து கிடந்தன.

இவைகள் யாவும் யாருக்கும் பயன் படாமல் இப்படி கிடக்கிறதே என்று பரபர்பான குரலில் போகர் பேசியதை கேட்ட சித்தர்கள்,"போகா!மக்கள் அறியாமை மயக்கத்தில் முழ்கி கிடக்கிறார்கள்.நல்லதை பெறுவதில் அக்கரை இல்லாத அவர்களை தேடி இவையெல்லாம் அங்கு போக வேண்டுமா?"என்று கேட்டு விட்டு போகரின் கண்ணில் இருந்து மறைந்தார்கள்.

யாவரும் சுலபத்தில் பார்க்க முடியாத சித்தர்களை பார்த்தும் அவர்களுடன் பேசி காலத்தை கடத்தி விட்டோமே என்று வருந்தினார் போகர்.
தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார்.சிறிது தூரம் புற்றிலிருந்து ஒளி கற்றையொன்று தெரிந்தது.அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் நின்றார்.யாரோ ஒரு சித்தர் இந்த புற்றினுள் தவம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர் அந்த புற்றினை வலம் வந்து அதன் அருகே ஆசனம் இட்டு அமர்ந்து,கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.

நீண்ட நேரம் ஆனது.போகரின் தியானத்தால் புற்றிலிருந்த சித்தரின் தியானம் பாதிக்கப்பட்டது.உடனே புற்றை உடைத்து கொண்டு வெளியே வந்தார் அவர்.அவரின் திருமேனியின் ஒளியால் போகரின் தியானம் கலைந்தது.கண்களை திறந்த போகர் தம் எதிரே சித்தரை கண்டவுடன் காலில் விழுந்து வணங்கினார்.

புற்றிலிருந்து வெளி வந்த சித்தர் மூன்று காலங்களையும் உணர்ந்தவர்."நீ தான் காலங்கி நாதன் சீடனோ?...உனக்கு என்ன வேண்டும்?...ஏன்.என் தவத்தை கலைத்தாய்?.."என்று கோபமுடன் போகரை பார்த்து சித்தர் கேட்டார்.
"ஆம் சுவாமி நான் போகன் தான்.தங்கள் தவத்தை கலைத்ததற்காக என்னை மண்ணிக்க வேண்டும்.சித்தர்களை தரிசப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு.தங்களை சந்தித்ததற்கு பெரு மகிழ்ச்சி.என் வாழ்வில் பெரும் பேறு பெற்றுவிட்டேன்.தாங்கள் எத்தனை நாட்கள் இருக்கிறீர்கள்?..."

"சிறிது காலம் தான்....இது என்ன மாதம்?"

'கலி யுகம் தொடங்கி என்றதுமே இடை மறித்த சித்தர்....."என்ன அதற்குள் கலியுகம் பிறந்து விட்டதா?...துவாபர யுகத்தின் ஆரம்பத்தில் இங்கே தியானம் செய்ய ஆரம்பித்தேன்'.என்று சொல்லி காலத்தின் வேகத்தை எண்ணிச் சிரித்தபடி சற்றும் முற்றும் நலா பக்கங்களையும் பார்த்தார்.மரமொன்று தெரிந்தது.

"போகா அதோ கீழே விழுந்த பழம் உனக்கு தான் போய்  எடுத்து சாப்பிடு"என்றார் சித்தர்.
அந்த பழத்தின் சுவையில் போகர் தன்னை மறந்தார்.

சித்தர் புலி தோல் ஆசனம் ஒன்றை நீட்டி,"இது உனக்கு தவம் செய்ய உதவும்"என்று சொல்லி கொண்டு இருந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரே தோன்றவே,"போகா!இனி உனக்கு தேவையானவற்றை இந்த பதுமை சொல்லும்"என்று சொல்லி விட்டு சித்தர் கண்களை மூடி மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார்.

பதுமை போகருக்கு கரு உண்டாவது முதல் அவ்வுயிர் படும் இன்ப துன்பங்கள் என்றும் கடைசி நிலைகள் வரை தெளிவாக விளக்கி விட்டு போகரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டு வந்தது போலவே மறைந்தது.

போகர் அங்கிருந்து தம் பயணத்தை தொடங்கி மேரு மலையின் மற்றொரு பகுதிக்கு போகும் போது,'போகா!இதற்கு மேல் போகாதே நில்...நில்...'என்று ஒரு குரல் தடுத்தது.

போகர் அங்கே திரும்பி பார்த்த போது அங்கே ஒரு பதுமை இருந்தது."ஏன் போகக் கூடாது ?"என்று போகர் கேட்டார்.
"போகா! நீ போகும் பக்கமெல்லாம் கண்ணுக்குத் தெரியாதபடி இருந்து கொண்டு சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.தெரியாமல் நீ அவர்கள் மேல் இடித்து விட்டால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.ஆகையால் மேலே போகாதே உனக்கு வேண்டியதை கேள் நான் தருகிறேன்?"என்றது பதுமை.

"மரணமடைந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மூலிகைகள் இருக்கும் இடத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்"என்றார் போகர்.

அதை மட்டும் கேட்காதே என்று மறுத்த அந்த பதுமை போகருக்கு வேறு பல மூலிகைகளின் ரகசியங்களையும்,அவற்றின் சாதனை வகைகளையும் சொல்லி விட்டு போகரை திருப்பி அனுப்பி விட்டது.

நினைத்தது நடக்காத வருத்தத்தில் சித்தர் கொடுத்த புலி தோலின் மீது கடும் தவம் புரிந்தார் போகர்.



மேருமலையை தங்கமயமான மலை என்று இதிகாச புராணங்கள் தெரிவிக்கின்றன.காரணம்,சித்தர்கள் அடிக்கடி தங்கள் ரசவாத வித்தையை செய்து பார்த்ததின் விளைவாக மேருமலை தங்கமயமாகி விட்டது.

அம்மலையை அடைந்த போகர் அம்மலையில் இருந்து வீசிய ஒளியால் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தார்.அங்கு அவரது மூர்ச்சை தெளிவித்த சித்தர் ஒருவர் அடுத்தவர் நலனுக்காக தம் வாழ்வை அர்பணித்து கொண்டிருக்கும் போகரை வாழ்த்தி ஒரு வஜ்ரகண்டி மாலையை அவரது கழுத்தில் அணிவித்தார்.

நான்கு யுகங்களை சேர்ந்த சித்தர்கள் அங்கு இருப்பதை போகருக்கு காட்டிவிட்டு அவர் மறைய,பல உயர்ந்த சித்தர்கள் போகரை ஒரு குகைக்குள் கூட்டி கொண்டு போய் உயிரை அளிக்கும் மூலிகையை காண்பித்து அவற்றின் விபரங்களை கூறினார்கள்.

பல காலமாக அலைந்து திரிந்து சுற்றியதின் பலன் கிடைத்து விட்டது என்று மனம் மகிழ்ச்சியில் திளைத்த போகர் அவர்களை வணங்கி விடை பெற்று கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்.

மகிழ்ச்சியின் மிகுதியால் கிடுகிடுவென கீழே இறங்கி வந்த போகரின் வேகத்தில் தரை அதிர்ந்தது.அதன் விளைவாக குகை ஒன்றில் தவம் புரிந்து கொண்டிருந்த சித்தர் ஒருவரின் கடுந்தவம் கலைந்தது.தவம் கோபத்தில்" போகா!அமைதியான இந்த இடத்தின் தன்மையை நீ அடியோடு கெடுத்துவிட்டாய்.அதற்கு காரணம் உன் மித மிஞ்சிய மகிழ்ச்சி தானே.மரணம் அடைந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் உன் வித்தை மட்டும் பலிக்காமல் போகும்.போ....என்று கடும் சாபமிட்டு அங்கிருந்து போகும்படி கட்டளையிட்டார்.
போகரின் எண்ணக் கோட்டையில் இடி விழுந்தது.அவரது மனக்கோட்டை மணல் கோட்டைகளாயின.சற்று நேரத்திற்கு முன் மனதில் மண்டி கிடந்த மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம் நொடி பொழுதில் மின்னலாய் மறைந்தன.

இந்த உலகமே வெறுத்து ஒதுக்கி விட்டது போல்  அவமானத்துடன் தள்ளாடிய படியே நடந்து வந்த போகர் அப்படியே மயங்கி விழுந்தார்.

கண்ட பேரண்ட பறவை ஒன்று சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து போகரின் மயக்கத்த்தை தெளிவித்து அவரது வரலாறு அணைத்தையும் கேட்டறிந்து.பின் அவருக்கு சித்தர்கள் சாதனை அடைவதன் மூல ரகசியங்களை கூறி விட்டு,"போகா!இங்கு இருக்காதே.உடனே கீழே போய்விடு.சாதாரண கண்களுக்கு தெரியாமல் இங்கே கோடிக்கணக்கான சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.அங்கும் இங்கும் அலைந்து அவர்களின் தவத்தை கெடுத்துவிடாதே.இப்படியே போ ...என்று வழிகாட்டி விட்டு பறந்து போய்விட்டது.
மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தார் போகர்.வரும் வழியில் திருமூலர் பாட்டனாரின் சமாதியை கண்டு அங்கே தவமிருந்து அவரை தரிசித்தார்.

"போகா! சொன்னதை கேள் திருந்தமாட்டேன் என்று அடம்பிடிக்கும் மக்களிடம் எங்களை அறிமுகப் படுத்தாதே.முடிந்தவரை நீயும் அவர்களிடமிருந்து விலகி இரு.அது தான் உனக்கு நல்லது" என்று சொன்ன திருமூலரின் பாட்டனார் உடனே மறைந்தார்.

உலகத்தினரின் செயல்களை கண்டு மனம் நொந்து போயிருக்கும் சித்தர்களை நினைத்து போகரின் உள்ளம் வேதனையுற்றது.

பொதிகை மலைக்கு ஆகாய மார்கமாக சென்று ஓரிடத்தில் அமர்ந்து கூர்ம நாடி வென்று தவநிலையில் மனதினை ஒரு முகப்படுத்தலானார்.அதன் பின் தியானத்தில் இருந்து எழுந்தவர் முன் உமா தேவி காட்சி தந்து"போகா!பழனி மலைக்கு சென்று முருகனை தியானம் செய்.முருகன் உனக்கு அருள் புரிவான்"என்று வழிகாட்டி மறைந்தார்.
அதன்படி போகர் பழனி மலைக்கு சென்று கடும் தவம் புரிந்தார்.அங்கே பழனியாண்டவர் தண்டாயுதபாணியாகக் காட்சியளித்து உபதேசித்தார்.

"போகரே!நீ என்னை தரிசனம் செய்தது போல் அணைவரும் தரிசிக்க வேண்டும் அல்லவா?அதற்கு ஏற்பாடுகள் செய்"என்று கூறி அங்கு தன் வடிவத்தை எந்தெந்த முறையில் விக்ரமாக செய்ய வேண்டும்.மூல விக்ரகத்தை எவ்வாறு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.வழிபாட்டு முறைகள் இவற்றையெல்லாம் கூறிய முருக பெருமான் காயகல்ப உபாயத்தை கூறி மறைந்தார்.



பழனியாண்டவர் சொன்னபடியே"நவபாஷணம்"என்னும் ஒன்பது விதமான கற்களை கூட்டு பொருட்களாக கொண்டு பழனியாண்டவர் விக்ரகத்தை அழகாக செய்து முடித்த போகர் முருகப் பெருமான் சொன்னபடியே பிரதிஷ்டையும் செய்து முடித்தார்.வழிபாட்டு முறைகளையும் வகுத்தார்.

தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்த விபூதியைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார்.பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து,இறைவனின் திருமேனியில் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தை உணவாக உண்டார்.

நவபாஷணத்தை கூட்டி உருவாக்கி திருமேனியில் ஊறிய பஞ்சாமிர்தமும்,விபூதியும் போகருக்கு உள்ளொளி பெருக்கியது.
இதே போன்ற நவபாஷாண சிலையை திருச் செங்கோடு அர்த்த நாரீஸ்வரரை உருவாக்கியதும் இவரே என்று சொல்லப்படுகிறது.


இறைவன் சன்னிதானத்திற்கு அருகே தனக்கென தவத்திற்கான இடத்தை ஒன்றை அமைத்து கொண்டு தன் கடைசி காலத்தை பழனியில் கழித்த போகர் அங்கேயே தன் அனுபவங்களை உபதேசித்தார்.

போகர் ரசக்குளிகையின் மகத்துவம் அறிந்தவர்.இரசக்குளிகை செய்து பல சித்துக்களை செய்து அதன் ஆற்றலை கண்டு அதிசயித்தவர்.

அழிந்து போக கூடிய உடலை அழியாத கல்பமாக்கி காலம் கடந்து வாழ்ந்து வந்த சித்தர்களின் அருட் கொடையாக பல எண்ணற்ற வைத்திய வாகடங்களை எழுதி இருக்கிறார்.

தமது இலகிமா சக்தியினால் ஆகாயத்தில் பறந்து சென்று உலகை வலம் வந்திருக்கிறார்.லகிமா சக்தியால் புவி ஈர்ப்பு விசையை மீறி இயங்குவது சாத்தியமே!லகிமா சித்தியுடைய சித்தர்கள் இதன் காரணமாகவே கனமான உடலை பஞ்சு போலாக்கிக் கொண்டு நினைத்த மாத்திரத்தில் ஆகாயத்தில் சஞ்சரிக்க முடிகிறது.
போகர் அடிக்கடி சீன நாட்டிற்கு நினைத்த நேரத்தில் பக்கத்து தெருவிற்கு போவது போல் போய் விட்டு வந்திருக்கிறார்.
ஆகாய வானில் நடப்பதும்,படுத்தும்,நிற்பதுக்குமான வித்தையை எல்லாம் அடக்கிய ஆகாய கசினப் பயிற்சி வித்தையில் வல்லவர் போகர்.

வெள்ளையர்கள் வாழும் நாடுகளுக்கு போய் இவர் உபதேசம் செய்ததாகவும் ஒரு நூல் கூறுகிறது.

போகர் பழனியில் இருந்த போது தன் சீடன் புலிப்பாணியிடம் "நான் மூலிகை சேகரிக்க போய்கிறேன்.நீ இங்கே பூஜைகளை பார்த்துக் கொள்"என்று கூறி விட்டு ஆகாய மார்க்கமாக செல்லும் போது சீன நாட்டில் கூட்டம் கூட்டமாக இருப்பதை பார்த்து விட்டு கீழே இறங்கினார்.

அங்கே அழகான பெண்களை கண்டு இங்கேயே கொஞ்ச காலம் தங்கலாம் என்று எண்ணி அங்கேயே அப் பெண்களுடன் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்.

பழனியில் இருந்த புலிப்பாணியோ,பல வருடங்கள் ஆகியும் தம் குருநாதர் இன்னும் திரும்பவில்லையே என்று எண்ணி மைசூரில் இருந்து வந்து தொண்டு செய்து கொண்டிருந்த உடையார் என்பவருக்கு உபதேசம் செய்து அவரை பழனி முருகனுக்கு பூஜையை செய்ய சொல்லி விட்டு பின்னர் தன் குருநாதரை தேடி சீனாவிற்கு சென்றார்.

அங்கு சீனப் பெண்களுடன் போக வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கும் தன் குருநாதரை புலிப்பாணி மாறு வேடத்தில் சென்று பழனிக்கு வரும்படி அழைத்தார்.அங்கே மகாசீனசாரம் என்னும் வஜ்ரோலி முத்திரையை பழகும் போது போகர் தன் சக்தி முழுவதையும் இழந்துவிட்டார்.இவ்விதம் போகர் தன் தவ சக்தி முழுவதையும் இழந்துவிட்ட நிலையில் புலிப்பாணி அவருக்கு  தவசக்தியை திரும்ப பெற தான் ஏற்பாடு செய்வதாக கூறி குருநாதரை தன் முதுகில் சுமந்தபடி பழனிக்கு வந்து விட்டார்.

இழந்த வலிமையை திரும்ப பெற தன் சீடரையே தனக்கு உபதேசாக்கும் படி போகர் சொல்ல அதற்கு புலிப்பாணியோ இது முறையல்ல என்று மறுத்து விட்டார்.
இதனால் போகர் தண்டத்தை வைத்து,அதற்கு புலிப்பாணியை உபதேசிக்க செய்து,பின்பு அத் தண்டத்திலிருந்து உபதேசம் பெற்றார்.பிறகு பல காலம் தவமிருந்து தன் பழைய நிலையை பரிபூரணமாக பெற்றார்.

பேகரின் பெருமை அறிந்த சித்தர்கள் பலர் அவரிடம் வந்து குளிகை பெற்று போயிருக்கிறார்கள்.
போகர் சிங்கம்,புலி,பசு போன்றவற்றிற்கும் உபதேசம் செய்து ஞானம் அளித்திருககிறார்.சதுரகிரி,சிவகிரி முதலிய இடங்களில் எல்லாம் இவர் இருந்திருக்கிறார்.
கொங்கணர்,கருவூரார்,சுந்தரானந்தர்,மச்ச முனி,நந்தீசர்,இடைக்காடர்,கமலமுனி,சட்டை முனி,ஆகியோர் இவரது மாணக்கர்கள்.

போகர் சீனாவில் வாழ்ந்த போது சீன மக்களுக்கு சித்துக்கள் மூலம் பல்வேறு நன்மைகளை செய்துள்ளார்.கடற்பயணம் செய்ய நீராவி கப்பல் ஒன்றையும் பறக்கும் இயந்திரம் ஒன்றையும் உருவாக்கி தந்துள்ளார்.



பழனியில் சில காலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார்.அவரது சமாதி பழனியாண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

(இந்த படத்திலுள்ள போகர் சிலையின் நெற்றி பகுதியில் ஒளி கீற்று ஒன்று ஏற்பட்ட போது எடுத்த உண்மை படம்)

போகர் பூஜித்து வந்த புவனேஸ்வரி அன்னையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் காணலாம்.போகர் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும,புவனேஸ்வரி சந்நிதி உள்ள இடத்திற்கும் இடையில் சுரங்க பாதை இருப்பதாக கூறப்படுகிறது.
போகருக்கு பின் அவரது சீடர் புலிப்பாணியும் அவருக்கு பின் அவரது மரபில் வந்தோரும் திருமலை நாயக்கர் காலம் வரை பழனி முருகனை பூஜித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

போகர் இயற்றிய நூல்களின் பட்டியல் அகத்தியரின் சௌமிய சாரத்தில் காணப்படுகிறது.அவை போகர்12000,போகர் சுப்த காண்டம்7000,போகர் நிகண்டு1700,போகர் வைத்தியம்1000,போகர் வைத்தியம் 700,போகர் சரக்கு வைப்பு 800,போகர் ஜனன சாகரம்550,போகர் கற்பம்360,போகர் உபதேசம்150,போகர் இரணவாகடம்100,போகர் ஞான சாராம்சம்100,போகர் கற்ப சூத்திரம்54,போகர் வைத்திய சூத்திரம்77,போகர் முப்பு சூத்திரம்37,போகர் அட்டாங்க யோகம்24,போகர் பூஜாவிதி20.
மேற்கண்ட நூல்கள் போகர் 12000 மற்றும் இரணவாகடம் 100எனும் இரு நூல்கள் மட்டுமே கிடைக்கவில்லை.
தியானச்செய்யுள்

சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே;
சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;
நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க…

மகா போகர் சித்தர் பூசை முறைகள்:

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ மகா போகர் சித்தர் படத்தை வைத்து அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பட பட்டிருக்கும் தியானச் செய்யுளைக் கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி புஷ்பம், சாமந்திப்பூ, அல்லது சம்பங்கிப்பூ, கதிர்பச்சை கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி!
2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி!
3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுவரே போற்றி!
4. ப்ரணவ ள்வரூபமாக இருப்பவரே போற்றி!
5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி!
6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி!
7. மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி!
8. ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி!
9. பசும்பால் பிரியரே போற்றி!
10. நவபாஷாணம் அறிந்தவரே போற்றி!
11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
12. நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளிஅயும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை செபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

ஸ்ரீ போகரின் பூசை முறைகள்

இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிகளுக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்கண்ட பலன்கள் கிடைக்கும்.

1. நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் இவற்றின் பிரச்சினைகள் தீர்ந்து வெற்றி கிடைக்கும்.
2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும்.
3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும்.
4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
5. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
6. பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
7. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
8. இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து அவருக்கு செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

போகர் வரலாறு முற்றிற்று.

அகத்தியர்

சித்தர்-சித்த வைத்தியம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருபவர் அகத்திய மாமுனி தான்.



கும்ப முனி என்று போற்றப்படும் இந்த சித்தபிரான் உத்தம சித்தர்களின் தலைமைப் பீடாதிபதி-மகரகஷிகளின் உத்தம பீடம்-சித்த மாமுனி.கருவிலே தோன்றாமல் தான்தோன்றி பிரபு தத்துவராக இறைவன் அருளால் கலசக் கும்பத்தில் சுயம் பிரகாசமாய்த் தோன்றியவர்.

இன்றைய மிகப் பெரும் மருத்துவ வல்லுநர்களும் விடை காண முடியாமல் தவிக்கும் பல நோய்களுக்கும்,மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்திருப்பவர் இவர்.
இவருடையதோன்றம் பற்றிய புராணங்கள் பல்வேறு விதமாக கூறப்படுகிறது.

தாரகன் முதலான அரக்கர்கள் உலக மக்களுக்குப் பெரும் இடையூறுகளை செய்து வர அவர்களை அழிக்க இந்திரன்,வாயு,அக்னி, முதலானோருடன் பூமிக்கு வந்தான்.இவர்களை கண்ட அரக்கர்கள் கடலில் சென்று ஒளிந்தனர்.அவர்களை அழிக்க இந்திரன் அக்னியிடம் கடல் நீர் வற்றி போகும் படி செய்யுமாறு கட்டளை இட்டான்.

ஆனால் அக்னியோ கடல் நீரை வற்ற செய்தால் உலகில் அணைத்து நீர் வளங்களும் குறைந்துவிடும் என்று கூறி இந்திரனை சமாதானம் செய்தார்.பறுபடியும் அரக்கர்களின் தொல்லை அதிகரித்தது.அக்னி கடல் நீரை வற்ற செய்யாததால்தான் இந்த நிலை இந்த நிலை ஏற்பட்டது.அன்றே வற்றி போக செய்திருந்தால் இந்த நிலை தொடர்ந்திருக்காது என்று நினைத்து " நீ வாயுவுடன் கூடிய பூமியில் போய் கும்பத்தில் பிறந்து கடல் நீரையெல்லாம் குடிக்க கடவாய்"என்று சாபமிட்டான் இந்திரன்.அதன்படி அக்னி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்திராய் தோன்றினார்.



இந்திரனின் வேண்டுகோளின் படி அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட இரந்திரன் அரக்கர்களை அழித்தான்.அதன்படி அகத்தியர் நீரை பழையபடி கடலுக்குள் விடுவித்தார்.
அகத்தியர் தொன்றியதற்கான இன்னொரு நிகழ்ச்சி...
பூமியில் கஞற்கரை மித்ரா என்பவரும்,வருணர் என்பவரும் தங்கி இருந்த சமயம்,இந்திரனின் சாபத்தால் பூலோகத்திற்கு வந்து ஊர்வசியை கண்டனர்.அவளது அழகில் தங்கள் மனதை பறி கொடுத்த இருவருக்கும் மிகுந்த காமம் உண்டாயிற்று.இதன் காரணமாக ஒருவர் தம் வீரியத்தை குடத்தில் இட்டார்.மற்றொருவர் தண்ணீரில் இட்டார்.
குடத்திலிருந்த வீரியத்தில் அகத்தியரும்,தண்ணீரில் இட்ட வீரியத்தில் வசிஸ்டரும் தோன்றினர்.
பிரம்ம தேவன் ஊர்வசியின்.நடனத்தை கண்டு அவள் அழகில் மயங்கி தன் வீரியத்தை விட அகத்தியர் தோன்றியதாக காவிரி புராணம் கூறுகிறது.

குடத்திலிருந்து தோன்றிய தால் அகத்தியருக்கு கும்ப முனி,குட முனி என்னும் பெயர்கள் தோன்றியது.
அகத்தியரின் பெயரால் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரம் ஒன்று கடல் நீரை உதயத்தில் வற்ற செய்யும் என்று கூறப்படுகிறது.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரு ஆண்டுகளாக கடுந்தவம் புரிந்து பல அறிய சித்திகளை பெற்றார்.
இராம பிரானுக்கு சிவ கீதையை போதித்தார்.சுவேதன் என்பவன் பிணம் திண்ணுமாறு இருந்த சாபத்தை போக்கினார்.தமக்கு வந்தனை வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்து இருந்த இந்திரதுய்மனை யானையாக போகும்படி சபித்தார்.

அகத்தியர் தென் திசை நோக்கி வரும் வழியில் தன் முன்னோர்கள்(பித்ருக்கள்) தலைகீழாக மரத்தில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டார்.அவர்கள் அகத்தியரிடம் திருமணம் செய்து ஒரு மகனை பெற்றால் தான் தாங்கள் சொர்கம் புக முடியும் என்றார்கள்.
அகத்தியரும் தன் முன்னோர்களின் சாபத்திற்கு அஞ்சி"நான் விரைவில் இல்லறம் கண்டு ஒரு மகவை பெற்று உங்கள் இத்துன்பத்தை போக்குகிறேன்"வாக்குறுதி கொடுத்தார்.அவர் விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் யாகத்தில் பிறந்த உலோப முத்திரையை அதிக பொருள் தந்து மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.

முருக கடவுளின் ஆணைப்படி தமிழுக்கு அகத்தியம் என்னும்.இலக்கய நூலை இயற்றி தமிழை வளர்த்தார்.
கல்வி,கலைகளில் சிறந்து விளங்கிய இவருக்கு திரண,தூமாக்கினி(தொல்காப்பியர்),அதங்கோட்டாசான்,துராலிங்கன்,செம்பூட்சேல்,வையாபிகன்,வாய்பியன்,பனம்பாரன்,கழாரம்பன்,அவிநயன்,காக்கை பாடினி,நற்றத்தான்,வாமனன் போன்ற மாணாக்கர்கள் இருந்தனர்.

அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள 'சமரச நிலை ஞானம்'என்னும் நூலில் முக்கியமான நரம்பு முடுச்சுகள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.
அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் எனும் நூலில் கிரிகை நூல் 64 என்ற பகுதியில் பதினெட்டு வகையான மன நோய்கள் பற்றியும்,அவர்களின் இயல்புகள் பற்றியும்,அவர்களுக்கு உறிய மருத்துவ முறைகளை பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார்.

அகத்தியர்' அஷ்டமா சித்துகள் 'எனும் நூலில் குழந்தைகளுக்கு ஏள்படும் தோஷங்கள் குறித்து கூறியுள்ளார்.

அகத்தியரின் வைத்திய நூல்கள்

1.அகத்தியர் வைத்திய ரத்ன சுருக்கம் 360
2.அகத்தியர் வாகட வெண்பா
3.அகத்தியர் வைத்தியக் கொம்பி
4.வைத்திய ரத்னாகரம்
5.வைத்திய கண்ணாடி
6.வைத்தியம் 1500
7.வைத்தியம் 4600
8.செந்தூரன் 300
9.மணி 4000
10.வைத்திய சிந்தாமணி
11.கர்ப்ப சூத்திரம்
12.ஆயுள் வேத பாஸ்யம்
13.வைத்திய நூல்கள்
14.பெருந்திரட்டு
15.பஸ்மம் 200
16.நாடி சாஸ்த்திரம் பஷினி
17.கரிசல் பஸ்பம் 200.

சிவ ஜாலம், சக்தி ஜாலம்,சண்முக ஜாலம்,ஆறெழுத்தந்தாதி,கர்மவியாபகம், விதி நூண் முவகை காண்டம், அகத்தியர் பூஜா விதி,அகத்தியர் சூத்திரம் 30 போன்ற தத்துவ நூல்களும்
ஐந்திலக்கனம் அடங்கிய அகத்தியம்,வட மொழி வைத்திய நூலான அகஸ்திய சம்ஹிதை போன்ற நூல்கள்
"அகஸ்த்தியர் ஞானம்" என்ற நான்கு தொகுப்பு பாடல்கள் சித்தர் பாடல் திரட்டில் காணப்படுகிறது.

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

இதுவரை கண்டவை அணைத்தும் புராணங்களில் கூறப்படும் அகத்தியர் பற்றிய விபரங்கள் என்றாலும் அகத்தியர் என்ற பெயர் கொண்ட அறிஞர்கள் பலர் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து பல்வேறு இலக்கியங்களை இயற்றியுள்ளனர்.
பொதிகைமலை அகத்தியர்,முத்தூர் அகத்தியர்,வாதாபி அகத்தியர்,உலோப முத்திரை அகத்தியர்,மைத்திரா வர்ண அகத்தியர்,மானிய அகத்தியர்,அம்ப அகத்தியர்,அவிர்பூ புத்திரர் அகத்தியர்,கத்ருவன் புத்திரர் அகத்தியர்,ஏழு முனிவர்களான ஒருவர் அகத்தியர்,புரோகித அகத்தியர்,கொடி தோள் செம்பியன் காலத்து அகத்தியர்,உலோப முத்திரை அகத்தியர்2,கோசல நாட்டு அகத்தியர்,பஞ்சவடி அகத்தியர்,மலையமலை அகத்தியர்,குஞ்சர கிரி அகத்தியர்,காரை தீவு அகத்திரயர்,போதலகிரி அகத்தியர்,திலோத்தமை அகத்தியர் ,திருமாலை சிவனாக்கி அகத்தியர்,பள்ள அகத்தியர் இப்படியாக பல அகத்தியரின் பெயர்களும் தமிழ் இலக்கியங்களிலும்,புராணங்களிலும் கூறப்பட்டு வருவதால் புராண அகத்தியரே அன்றிஅவருக்கு பின் தோன்றிய அகத்தியருள் ஒருவரே சித்தராய் அகஸ்த்தியர் ஞானம் பாடி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

அகத்தியருக்கு தட்ஷினா மூர்த்தி என்ற பெயரும் உண்டு என்பதை' தட்ஷினா மூர்த்தி குரு முகம் நூறு'எனும் நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
சென்னையிலுள்ள கீழை நாட்டு கையெழுத்து பிரதி நூலகம் தயாரித்துள்ள ஒரு பட்டியலில் அகத்தியர் பெயரில் சுமார் 96 நூல்கள் காணப்படுகின்றன.

சித்தராய் விளங்கிய அகஸ்தியரை பற்றி சில கருத்துகளை நாம் "அகஸ்தியர் காவியம் 12000"என்ற நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
அகத்தியர் பாண்டிய நாட்டின் காய்ச்சின வழுதி எனும் அரசனின் அரசவையில் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் கடற்கோள் ஏற்பட்டு மதுரையையும்,குமரி ஆற்றலை அடுத்த 49 நாடுகளும் அழிந்து போயின.இந்த பிரளயத்தை பற்றி அகத்தியர் தமது பெருநூல் காவியம்12000ல் குறிப்பிட்டுள்ளார்.



இந்த பிரளயத்தின் போது தான் பெரும்பாலான தமிழ் நூல்கள் காணாமல் போய்விட்டன.கடலோரத்தில் மிதந்த சில ஓலை சுவடிகளை மட்டும் சேகரித்து கொண்டு வந்து அவற்றின் கருத்துகளை அகத்தியரால் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
வைத்தியர் என்கின்ற முறையில் இவருக்கு அங்கே ஒரு தனி சிறப்பு ஏற்பட்டது.நாடு முழுவதும் இவரது வைத்திய திறமையின் புகழ் பரவியதுகும்ப முனி,குறு முனி,பொதிகை முனி,தமிழ் முனி என்கின்ற சிறப்புப் பெயர்களும் ஏற்பட்டன.



அகததியர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர்களும்,அபிமானிகளும் தங்கள் பெயர்களை அகத்தியர் என்ற பெயரிலே வைத்து கொண்டு வைத்தியம் செய்ய தொடங்கினர்.நூல்களையும் இயற்றினர்.பிற்காலத்திலும் பலர் அகத்தியர் என்ற பெயரிலே நூல்களை இயற்றி சேர்த்துவிட்டனர்.அகத்தியர் தாம் வடக்கே இருந்து கொண்டு வந்த ஆயுர் வேதத்தினையும்,தமிழ் சித்தர்களின் மருத்துவத்தையும் ஒன்று கலக்க முயன்றதால் ஒரு நோய்க்கு பல விதமான சிகிச்சை முறைகளை கூற வேண்டியிருந்தது.இதனால் முரண்பட்ட கருத்துக்கள் தோன்றின.

.அகத்தியர் திருவனந்த புரத்தில்(அசந்த சயனம்)சமாதியடைந்ததாக கூறப்படுகிறது.ஒரு சிலர் கும்பகோனத்திலுள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

இவருக்கு சென்னையிலும்,தமிழ் நாடு மற்றும் சில இடங்களில் கோவில் உள்ளன.

அகத்தியரின் சில பாடல் விளக்கம்

மோட்சமது பெறுவதற்குச் சூட்சஞ் சொன்னேன்,
மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளி போடு;காசியினிற்
புண்ணியத்தைக் கருதி கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே:பாழ்போகாதே-பலவித
சாஸ்திரமும் பாருபாரு
ஏச்சலில்லாதவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
என் மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே!

மோட்சம் -விடுதலை பெறக்கூடிய வழிகள் செல்கிறேன்.ஆசை,களவு,கொலை செய்யாதீர்கள்.கோபத்தை தள்ளி விடுங்கள்.உலகில் புண்ணியத்தை நல்வினையை எண்ணி செயல்படுங்கள்.

பாபங்கள்-தீயச் செயல்களை செய்யாதே என்று பல சாஸ்த்திரங்கள் கூறுவதை பாருங்கள்.

பழிச் சொல்லில்லாதவர்கள் வழியை எண்ணிப் பாருங்கள்.

நல்லோர் வழியில் செல்லுங்கள்.
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்

உத்தமனாய் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறு பயிர் செய்ய வேணும்;
பாழிலே மனத்தை விடான் பரமஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற்கள்ளரப்பா கோடா கோடி;
வருவார்களப்பனே அனேகங்கோடி;
வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே

இறைவன் ஒருவன் தான்.உண்டு.அவனை வணங்க வேண்டும்.நல்லவனாய் பூமியில் வாழ வேண்டும்.தக்க காலத்தில் விவசாயம் செய்ய வேண்டும்.தீய வழிகளில் மனதை விடக் கூடாது.உலகில் திருடர்கள் பலர் திரிவார்கள்.இன்னும் பல பேர் வருவார்கள்.இனிய வார்த்தைகளால் பேசுவார்கள்.

சத்தியமே வேணுமடா மனிதனானால்;
சண்டாளஞ்செய்யாதே தவறிடாதே;
நித்திய கர்மம் விடாதே,நேமம் விட்டு நிட்டையுன்
சமாதிவிட்டு நிலைபே ராதே:
புத்தி கெட்டு திரியாதே;பொய் சொல்லாதே-புண்ணியத்தை
மறவாதே-பூசல் கொண்டு
சத்தியதோர் தள்ளியிட்டு தர்க்கியாதே-கர்மியென்று
நடவாதே கதிர்தான் முற்றே.

மனிதன் என்றால் வாக்கினில் சத்தியம் வேண்டும்.பிறரை கெடுக்கும் சண்டாளத்தனம் கூடாது.நித்திய கர்மங்களை விடாதே.சமாதியினின்று வெளிவாராதே.நற் புத்தியில்லாமல் அலையாதே.பொய் சொல்லாதே.புண்ணியத்தை மறவாதே.வாக்குவாதம் யாரிடமும் செய்யாதே.

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா;
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மை யாமே

மனம் உட்பகை நீங்கி நன்றாக இருந்தால் .மந்திரம் சொல்ல வேண்டாம்.மனம் நன்றாக இருந்தால் வாயுவை உயர்த்துவது யோகம் வேண்டாம்.மனம் நன்றாக இருந்தால் வாசியை நிறுத்துதல் "பிராணயாம பயிற்ச்சி"வேண்டாம்.மனம் செம்மையானால் நீங்கள் கூறும் மந்திரங்கள்,ஞானிகளின் வார்த்தைகள்,செம்மையாகும்.
உட் பொருள்:நமது உட்பகைகள்.ஆணவம்,நீங்கினால்,நாம் இறைவனை சேரலாம்.வேறு மந்திரங்கள்,செயல்கள் போன்றவை வேண்டாம்.

சனி, 24 செப்டம்பர், 2016

முதல் சித்தன்

மதுரை சோம சுந்தர கடவுள்

மதுரை நகரில் குடி கொண்டுள்ள சோமசுந்தர கடவுளே முதல் சித்தனாக அவதரித்தார் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.



இங்கு நாம் அறிந்து கொள்ளவிருக்கும் சித்தர்கள் பலருக்கும் இவரே மூல குருவாக இருந்து ஞானத்தை போதித்து இருக்கிறார்.இதனை அந்தந்த சித்தர் பாடலில் மூலம் நாம் அறியலாம்.இப்பாடல்களின் சான்றுகள் சிவனை முதல் சித்தனாக உணர்த்துகிறது.

அவரது சித்து விளையாடல்கள் பல பல.இந்திர ஜாலம் போல் திடீரென பார்வைகளில் இருந்து மறைந்து போவார்.தூரத்திலுள்ள மலைகளை அருகில் வரச் செய்வார்.அருகே உள்ளனவற்றை தூரத்திற்கு செல்ல செய்வார்.முதியோரை இளைஞராக்குவார்.ஆணை பெண்ணாக்குவார்.பெண்ணை ஆணாக்குவார்.மலடியை மகப்பேறு உடையவளாக்குவார்.கூன்,குருடு,செவிடு,ஊமை,முடம் போன்றவற்றை பலரும் அறிய நீக்குவார்.

எட்டிமரத்தின் சுவை மிகுந்த பழங்களை பழுக்க செய்வார்.சீசன் இல்லாத நேரத்தில் ஆற்றில் நீரை பெருக்கெடுத்து ஓட செய்வார்.வயோதிகர்களின் முதுமை மனைவிகளை இளமையாக்கி கர்பம் தரிக்க திருநீரு கொடுப்பார்.ஆகர்ஷனம்,அதிரிச்சியம்,அஞ்சனம்,வசியம்,வாதம்,வயத்தம்பம், ஆகியவற்றை செய்வார்.இவ்வாறு அளவில்லாத சித்து வித்தைகளை சோமசுந்தர கடவுள் சித்தர் வடிவில் திருவிளையாடலாக புரிந்து கொண்டிருந்தார்.

மதுரை மன்னன் அபிஷேகப் பாண்டியனுக்கு இந்த செய்தி எட்டியது.இந்த அதிசய அற்பு செய்திகளை கேள்விபட்டு சித்தரை அழைத்துவருமாரு ஏவலர் சிலரை அனுப்பி வைத்தான் மன்னன்.சித்த மூர்த்தியின் திருவிளையாடலில் தங்களை மறந்து விட்ட அவர்கள் திரும்பாததை கணடு அமைச்சர்கள் சிலரை அனுப்பி வைக்கிறான் மன்னன்.
அமைச்சர்கள் சித்தரிடம் மன்னனின் அழைப்பை கூற,அவரோ"உமது மன்னனால் எனக்கு ஆகவேண்டியது என்ன?"என்று கூறி வர மறுத்து விட்டார்.அமைச்சர்கள் வந்து செய்தியை சொல்ல தன் தவறை உணர்ந்த மன்னன்"நாம் சென்று தான் அவரை அங்கு காண்பது தான் முறை.அவரை மதியாமல் அவரை இங்கு அழைத்து வர சொன்னோமே"என்று தன் தவறை உணர்ந்து திரு கோவிலுக்கு சென்று மதுரை நாயகனாம் சோம சுந்தர மூர்த்தியை வணங்கினான்.

பாண்டியனின் உள்ள குறிப்பினை உணர்ந்த சிவ யோகியாகிய சித்த மூர்த்திகள் அவருக்கு முன்னதாகவே தமது இந்திர விமானத்திற்கு வட மேற்கு திசையில் எழுந்தருளி இருந்தார்.
அரசன் அருகே வருவதை கண்டும் எவ்வித மரியாதையும் காட்டாது இறுமாப்புடன் அமர்ந்திருக்கும் சித்தரை அப்பால் போகும்படி காவலர்கள் துரத்தினர்.சித்தர் சிரித்தார்.அந்த சிரிப்பு மன்னனை சிந்திக்க வைத்தது.

பாண்டிய மன்னன் சித்தரை நோக்கி எழுப்பிய வினா...
"உமது நாடு எது?"....எந்த ஊர்?....என்ன பேர்?....எதற்காக இங்கே இருக்கிறீர்கள்?...என்று சரமாரியாக கேள்விகள் எழுந்தன மன்னனிடமிருந்து.

"அப்பா!யாம் எந்த நாட்டிலும்,எந்த ஊரிலும் திரிவோம்.யாம் இப்போது இருக்கும் தலம் காஷ்மீர நாட்டிலுள்ள காசி மாநகரம்.வித்தைகள் பல செய்து திரியும் சித்தர் யாம்.காடுகள் தொடங்கி ஆலயங்களை பல தொழ இங்கு வந்துள்ளோம்.மன்னனே!உம்மிடம் பெற வேண்டியது ஒன்றுமில்லை"புன்னகையுடன் பதில் வந்தது அவரிடமிருந்து.
அப்போதே இவருடைய சக்தியை சோதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மன்னனுக்கு வந்தது.

அப்போது வேளாளன் ஒருவன் ஒரு கரும்பினை கையில் கொண்டு வந்து வணங்கினான்.மன்னன் அக்கரும்பினை கையில் வாங்கி கொண்டு சித்தரை நோக்கி"வல்லவர்களில் உம்மை வல்லவராக நினைத்து கொண்டிருப்பவரே!இதோ இங்கே நிற்கும் கல்யானைக்கு இக் கரும்பை ஊட்டினால் நீர் எல்லாம் வல்ல சித்தர் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.இம்மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோம சுந்தர கடவுள் நீரே என்று ஒப்புக் கொண்டு நீர் விரும்பியதை அளிப்பவன்" என்றான்.

அங்கிருந்த மண்டபத்தூணில் கம்பீரமாக செதுக்கப்பட்டிருந்த அந்த கல்யானையின் மீது சித்தர் சற்றே கடை  கண்ணால் பார்க்க என்ன ஆச்சரியம்!பார்த்தவுடனே அக்கல்யானை கண்ணை திறந்தது.வாய் திறந்து பிளறி தம் தும்பிக்கையினை நீட்டி பாண்டியன் கையிலிருந்த கரும்பை பற்றிக் கடைவாயில் வைத்து சாறு ஒழுகுமாறு மென்று தின்றது.



மீண்டும் சித்தர் அந்த கல்யானையை சிறிது கடை கண் பார்வை பார்க்க உடனே கல்யானை பாண்டியனின் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையை எட்டிப் பறித்தது.எதிர்பார்க்க செயலை கண்டு சீற்றமடைந்த மெய்காவலர்கள் யானையை அடிப்பதற்காக கோலினை ஓங்க கண்கள் சிவக்க யானையை பார்த்தார் சித்தர்.அவ்வளவு தான் அந்த முத்துமாலையை விழுங்கி விட்டது.சித்தரின் மேல் பாண்டியனுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.

அரசனின் மெய்காவலன் சித்தரை அடிக்க வந்தான்.சித்தர் புன்னகை புரிந்தவாறே அவனை நில் என்று கூற மெய்காவலன் உட்பட மற்ற காவலர்கள் அணைவரும் அசையாது அப்படியே கற்சிலை போல் நின்றனர்.

இதை கண்ட பாண்டியன் சித்தரின் திருவடிகளில் விழுந்து தன்னை மண்ணிக்கும் படி வேண்டினான்.
அவன் அன்புக்கு மனமிரங்கிய சித்தர்"வேண்டும் வரத்தை கேள்"என்றார் அவனிடம்.மன்னனோ தனக்கு புத்திர பாக்கியம் அளிக்க வேண்டும் என்று வணங்கி தொழ அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்து தம் திருகரத்தை யானையின் மேல் வைத்தார்.

உடனே கல்யானை தனது துதிக்கையை
நீட்டி முத்துமாலையை மன்னனிடம் கொடுத்தது.முத்துமாலையை பெற்றுக் கொண்டு திரும்பிய பாண்டியனின் பார்வையிலிருந்து சித்தர் மறைந்தார்.ஆம் அங்கு சித்தரை காணவில்லை யானை தன் பழைய வடிவத்தை அடைந்திருந்தது.
இவையெல்லாம் இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்து வேத நாயகனாகிய சோம சுந்தர கடவுளை மீண்டும் வந்து வணங்கி விட்டு அரண்மனை வந்தான்.

சித்தரின் அருளால் அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்னும் புதல்வனுக்கு தந்தையாகும் பாக்கியம் கிட்டியது.நீண்ட நாள் அரசாட்சி செய்து விட்டு பின்னர் சித்தரின் திருவருட்பார்வையில் விளைந்த பேரின்பத்தில் இரண்டற கலந்துவிட்டான் மன்னன்.

இறைவன் சித்தராக வந்து பாண்டியன் கூறியதன் பேரில் கல்யானைக்கு கரும்பு கொடுத்த நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத்தில் கல்யானைக்கு கரும்பருத்திய பணலமாக குறிப்பிடபட்டுள்ளது.

நடன நங்கைக்கு உதவிய நடராஜன்


பாண்டிய மன்னன் திருப்பூவனம் எனும் சிவத்தலத்திலேயே பொன்னனையாள் எனும் கணிகை ஒருத்தி இறைபணி செய்து வந்தாள்.அவள் ஏழிசை யாழை இசைத்து பாடுவதிலும் பரத கலையிலும் சிறந்தும்,அழகிலும் பிறவற்றிலும் ரம்பையை போல் விளங்கினாள்.சிவப்புண்ணிய நெறியில் நெறிபிறழாத ஒழுக்கத்தை மிகவும் கடைபிடித்து வந்தாள்.
நாள் தோறும் வைகறையில் எழுந்து தன் தோழியருடன் சென்று நீராடி சிவபூஜை முடித்துக்கொண்டு  திருகோவிலுக்கு சென்று திருபூவனநாதரை வணங்கி சுத்த நிருத்தம் ஆடி விட்டு ,பின் தன் இல்லத்திற்கு வந்து சிவனடியார்களுக்கு திருவமுது படைத்து விட்டு அதில் எஞ்சியதை தாமும் புசிப்பதையே வழக்கமாக கொண்டிருந்த பொன்னனையாருக்கு நீண்ட நாள் ஏக்கமொன்று மனதிலே குடி கொண்டிருந்தது.

அதாவது சிவப் பெருமானினுடைய உற்சவ சிலையொன்றை செய்து திருபூவனம் கோவிலுக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் அது.
ஆடல் பாடல் முதலியவற்றிலிருந்து வருகின்ற பொருள் மிஞ்சா நிலையில் எப்படி உற்சவர் சிலையை உருவாக்குவது என்று வருத்தத்துடன் காணப்பட்டாள்.

ஒரு நாள் சிவபெருமான் சித்தரை போல் வேடம் பூண்டு பொன்னனையாளின் தாதியர்,'ஐயனே திருவமுது செய்ய உள்ளே எழுந்தருள வேண்டும் 'என்று வேண்ட ,அதற்கு சித்தர் "உங்கள் தலைவியை இங்கே அழையுங்கள்"என கூற அவர்கள் தங்கள் தலைவியிடம் சென்று ,"ஓர் அடியார் சித்த மூர்த்தியாய் புன்னகை தவழ அமுது செய்யாது இருக்கிறார்"என்று கூற,பொன்னனையாள் விரைந்து வந்து சித்தருக்கு அர்க்கியமும்,ஆசனமும் அளித்து அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள்.

சோம சுந்தரகடவுளான சித்தர் இதனை கண்டு மகிழ்ந்து,"பொன்னனையாளே உமது வாட்டத்திற்கு என்ன காரணம்?"என்று வினவினார்.
"எம் பெருமானே,சிவ பெருமானின் உற்சவர் திரு ஒன்றினை உருவாக்க ஆசைப்பட்டேன்.வரும் பொருள் முழுவதும் ஏனைய செலவிற்கே போய்கின்றன.கொஞ்சமும் மிஞ்சுவதில்லை.எப்படி என் விருப்பம் நிறைவேறப் போய்கிறதோ,தெரியவில்லை"என்று கவலையுடன் கூறினாள்.

பொன்னனையாள் கூறியதை கேட்ட சித்தர் மிகவும் மகிழ்ந்து அவளது சிவ தருமத்தை போற்றி பாராட்டி"உன் வீட்டிலுள்ள பித்தளை,ஈயப் பாத்திரங்கள் அணைத்தையும் இங்கே கொண்டு வா"என்றார் சிரித்தவாரே.
அதன்படி பொன்னனையாள்
இரும்பு,செம்பு,ஈயம்,பித்தளை,செம்பு,வெள்ளி,தகரம் போன்ற எல்லா உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வந்து சித்தர் முன்பு வைத்தாள்.

அந்த பொருட்களின் மீது சித்தர் திருநீற்றினை தூவி மனதிற்குள் தியானித்து பிறகு அவளை நோக்கி ,"இவற்றை இன்றிரவு நெருப்பிலிட்டு எடுத்தவுடனே இது பொன்னாகிவிடும்.பிறகு இறைவனின் திருமேனியை வார்பிப்பாயாக"என்றார்.
பொன்னனையாள் ,"எம் பெருமானே,இன்று இங்கிருந்து திருவமுது செய்து கொண்டு இக்காரியங்களை முடித்து கொண்டு பொழுது புலர்ந்ததும் செல்வீராக"என்று வேண்ட சித்தரோ,"சன்யாசி இரா தங்க இயலாது"என்றார்.

"சரி....தாங்கள் யாரென்று கூறுங்கள்"என அதற்குள் அவர்,"நான் மதுரையில் வசிக்கும் சித்தன்"என கூறி விட்டு உடனே மறைந்தார்.
சித்தராய் வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்திலே திரு கூத்து ஆடியருளும் சோம சுந்தர கடவுளே என்று அக்கணமே உணர்ந்து இறைவனை கண்டு விட்ட மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினாள்.

சித்தரின் கட்டளைப்படியே அன்றிரவு அனைத்து உலோகங்களையும் தீயில் புடமிட அவையாவும் பொன்னாகின.
பொன்னனையாள் அந்த பொன்னைக் கொண்டு இறைவனுக்கு திருவடிவம் வார்த்தாள்.சிவ பெருமானின் பொற்சிலை அழகினை கண்டு ஆராதித்து,சொக்கி கிள்ளி முத்தமிட்டாள்.பிறகு அந்த திருவுருவத்தை திருபூவனம் அலையத்தில் பிரதிஷ்டை செய்து திருவிழாவும்,தேர் விழாவும் நடத்தினாள்.

அந்த அழகிய பொற்சிலையில் பொன்னனையாள் அள்ளி கிள்ளி முத்தமிட்ட நகக்குறியை இன்றும் ஆலயத்திற்கு சென்றால் காணலாம்.

இங்ஙனம் சித்தராய் வெளிகாட்டி அற்புதங்கள் புரிந்த சிவபெருமானையே சித்தருக்கும் சித்தராய் விளங்குகிறார்.அவர் செய்த சித்துக்கள் யாவையும் திருவிளையாடல்களாய் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சித்தரின் மாணவர்கள் எட்டு பேர் என்று கூறப்படுகிறது.சிவன் என்ற சித்த குருவிடம் உபதேஷம் பெற்ற அந்த எண்மர்.

நந்திகள் நால்வர்.(சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத் குமாரர்)
சிவயோக மாமுனி (அகத்தியர்)
பதஞ்சலி(பாம்பாட்டி சித்தர்)
வியாக்ரமர்(புலிப் பாணி சித்தர்)
திருமூலர்.

சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தர்கள் யார்?

கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள்.கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்கிறது தேவார பதிகம்.
மனிதன் யார் ? அவன் எப்படி பட்டவன்?உலகில் அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொன்னவர்கள் இந்த சித்தர்கள்.

'சித்தர்'என்ற சொல் 'சித்'என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்ததாகும்.இவர்கள் பல நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.பழங்காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் "நிறைமொழி மாந்தர்கள்","அறிவர்" போன்றவைகளாகும்.சமண மதத்திலும்,பௌத்த மதத்திலும் இவர்களை "சாரணர்"என்று அழைத்ததாக  தஞ்சை தமிழ் பல்கலை கழக வாழ்வியற் களஞ்சியம் என்கிற நூல் கூறுகிறது.

இவர்கள் எல்லா சமயத்திற்கும் அப்பாற்பட்டவர்கள்.மனிதர்கள் பார்க்க முடியாததை பார்க்கின்ற,செய்ய முடியாததை செய்கின்ற,தெரியாததை உணர்த்துகின்ற அதீத சக்தி உடையவர்களாக இருப்பார்கள்.
அண்ட வெளிகளில் ஏற்படும் சலனங்கள்,சப்தங்கள் ஆகியவற்றை மந்திரங்களாக பிடித்து தரக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்!

இறைவனை இடைவிடாது தியானித்து தம் சித்தத்தை அடக்கி அக கண்ணால் இறைவனை கண்டு உணர்ந்து,தம் ஆத்ம சக்திகளால் செயற்கரிய செயல்களை செய்பவர்கள்.

உயிரும் இறைவனும் ஒன்றிய நிலையில் இருக்கும் யோக சமாதியை விரும்பி உணர்ந்தவர்கள்.
மௌனத்தை பிரதானமாக கொண்டு சித்தி அடைந்தவர்கள்.

இவர்கள் ரசவாத கலையை அறிந்தவர்கள்.மண்ணை பொன்னாக்குவார்கள்.கல்லை கற்கண்டாக மாற்றுவார்கள்.தகரத்தை தங்கமாக்குவார்கள்.இவர்கள் எட்டு வகை பேராற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள்.

எட்டுவகை ஆற்றல்(அஷ்டமா ஷித்தி)


1.அணிமா

யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஓர் அணுவாக சஞ்சரிப்பது.

2.மகிமா:

ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது.

3.லகிமா:

காற்றை விட உடல் எடையை குறைத்து மிதப்பது.

4.கரிமா:

உடல் எடையையும்,வலிமையையும் மலைக்கு சமமாக உயர்த்துக் கொள்வது.

5.பிராப்தி:

நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்றுவது.

6.ப்ரகாம்யம்:

விரும்பிய அணைத்தையும் எளிதாக பெறுவது.

7.ஈசித்துவம்:

எந்த வித சக்தி படைத்தவரையும் அடக்கி ஆழ்வது.

8.வசித்தும்:

உலகை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது.

இவைகள் அஷ்டமா சித்தியாகும்.இவைகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.இவர்கள் என்றும் அழியாத (காயகல்ப முறை)உடலை பெற்றவர்கள்.கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்றவர்கள்.மூச்சடக்கி உடலை இலகுவாக்கி பல நாடுகளையும் கண்டு மீண்டும் தன் பழைய உடலை அடைந்த அதிசய மகான்கள்.முக்கால நிகழ்வுகளை அறியும் தன்மை பெற்றவர்கள்.நினைத்த வடிவத்தை எடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.நீரிலும்,நெருப்பிலும்,வானிலும் நடக்கும் ஆற்றலை பெற்றவர்கள்.உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தும் வசியத்துவம் பெற்றவர்கள்.இயற்கைக்கு மாறாக அற்புதங்களை செய்ய கூடியவர்கள்.என்பவைகள் அணைத்தும் சித்தர்கள் பற்றிய செய்திகள்.
சித்தர்கள் என்றால் சித்துக்கள் செய்பவர்கள் என்று அர்த்தம்.சித்து என்பதன் பொருள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளுதல் என்பதாகும்.இவர்கள் சிவானுபூதி பெற்றவர்கள்.

சிவத்துடன் கலந்ததால் பிறப்பு,இறப்பு அற்று என்றும் எப்போதும் ஒன்று போல் இருப்பவர்கள்.கடவுளை காண முடியும் என்று கருதி கண்டு,அவரை அறிந்து,தெளிந்து சித்தி அடைந்தவர்கள்.இறைவனே சித்தராக வந்து சித்துக்கள் நடத்தியதை கலம்பக இலக்கியங்கள் கூறுகின்றன.

மண்ணில் அடங்கியும்,இறைவனுடன்.இரண்டர கலந்தும் அழியாத வரம் பெற்ற இந்த சித்தர்கள் ஞானிகளால் கால ஓட்டத்தில் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர்.
யுகங்களை தாண்டி வாழும் இவர்களின் உடல் பாதுகாப்பு இரகசியங்கள் ஏராளம்!ஏராளம்!...பல கற்பகாலம் இவர்கள் வாழ்ந்ததர்க்கு ஆதாரங்கள்!...அதுவும் ஏராளம்!....ஒரு சித்தர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொன்னால் நம்ப முடியுமா நம்மால்?....ஆம் அதுதான் உண்மை!...உடலை விட்டு உயிர் பிரிந்து கூடுவிட்டு கூடு பாய்ந்த மகா யோகிகள் இவர்களில் பலர்.

இப்படி உருவமாக அருவமாக திரிபவர்கள் சித்தர்கள்.இவர்களில் பெயர் தெரிந்தவர்கள் சிலர்.பெயர் தெரியாதவர்கள் பலர்.

துறவு பூண்டு,காடு மேடுகளையெல்லாம் சுற்றி திரிந்து. உலகியல் விதிகளை புறந்தள்ளி நிற்பவர்கள் சிலர்.பித்தராகவும்,சித்தராகவும் மற்றவர்கள் தன்னை இழிவு படுத்தி பேசவும் ஏசவும் மறைந்தும் தோன்றியும் வாழ்பவர்கள் சிலர்.தாம் கண்ட அனுபவங்களை விளக்க நூல்கள் எழுதி மனிதர்கள் அறியும் படி செய்தவர்கள் சிலர்.வாய் மூடி மௌனமாக காணப்படுபவர்கள் சிலர்.பிறர் தம்மை இகழ்ந்தாலும்,புகழ்ந்தாலும்,அறிந்தாலும்,அறியாவிட்டாலும் நாம் நிறைவுடனும்,அமைதியுடனும்,ஆத்ம திருப்தியுடனும்,வாழ்க்கையை நடத்துபவர்கள் இந்த சித்தர்கள்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பிராணயாமம் பற்றி திருமூலர் கூற்று

செயல் முறை

திருமூலர் காட்டிய பிராணயாமம் முறை மிகவும் எளிதானது.

இயம,நியமங்கள் கடைபிடிக்கும் முறை:

இயமம்-தீயவற்றை செய்யாதிருத்தல்.
நியமம்-நல்லனவற்றை செய்தல்.
ஆசனம்-உடலை உணர்வோடு இருத்துதல்

இனி ஆசனத்தில் அமர வேண்டும்.இவற்றை திருமூலர் பயன் தரக்கூடிய ஆசனங்கள் என்கிறார்.அவை பத்மாசனம்,சுவஸ்திகாசனம்,பத்திராசனம்,சோதிராசனம்,சிம்மாசனம்,கோமுகம்,வீராசனம்,சுகாசனம் ஆகிய எட்டு ஆசனங்களாகும்.இவை உத்தமானது.

பதினாறு மாத்திரை கால அளவு,இடது பக்க நாசி துவாரத்தின் வழியே காற்றை உள்ளே இழுக்க வேண்டும்.இது 'பூரகம்'எனப்படும்.

64 மாத்திரை கால அளவு காற்றை உள்ளே நிறுத்த வேண்டும்.இது கும்பகம் எனப்படும்.இனி உள்ளிருக்கும் காற்றை மெதுவாக 32 மாத்திரை கால அளவு வலது நாசி வழியாக விட வேண்டும்.இது ரேசகம் எனப்படும்.

இது போல் வலது நாசி துவாரத்தின் வழியாக காற்றை இழுத்து உள்ளே அதே கால அளவில் வைத்திருந்து,இடது நாசி துவாரத்தின் வழியாக வெளிவிட வேண்டும்.

இந்த முறையை காலையும் மாலையும் சுமார் பத்து தடவை செய்ய வேண்டும்.

திருமூலர் திருமந்திரத்தில் கூற வில்லை என்றாலும் ,பிராணயாமம் செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு திசைகளை நோக்கி அமர வேண்டும்.இது பதஞ்சலி முனிவரின் யோக முறையில் குறிப்பிட்டுள்ள வழி முறைகளாகும்.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிபட வுள்ளே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும்,உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே
                           _திருமந்திரம் 575.

பொருள்:பிராணயாமம் செய்தால் உடல் சிவக்கும்.தலை முடி கறுக்கும்.உடலில் ஆன்மா நிலைத்து நிற்கும்.(இறப்பை தவிர்க்கலாம்).

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை யுதைக்குக் குறியதுவாமே

காற்றை பிடிக்கும் கணக்கறிந்தவர் (பிராணயாமம் செய்பவர்)
காலனை எட்டி உதைத்து நெடு நாள் வாழலாம்.

இதற்கு இது தான் உபாயம்.